Connect with us

Cinema News

நம்பிய படமும் நக்கிட்டு போயிடுச்சு!.. வாய்க்கொழுப்பால் கதி கலங்கி நிற்கும் மந்தமான நடிகை!..

பெரிய நடிகர்களுடன் இணைந்து நடித்தாலே ஒரு சில நடிகைகளுக்கு திடீரென காதலா காதலா படத்தில் கமலுக்கு கொம்பு முளைப்பது போல முளைத்து விடும் போல, சமீபத்தில் அந்த மந்தமான நடிகைக்கு அப்படித்தான் கொம்பு முளைத்து அதன் காரணமாக ரொம்பவே கஷ்டப்பட்டு வருகிறார் என்றும் பரவலான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

எக்ஸ் லவ்வரை பகைத்துக் கொள்கிறேன் என்கிற பெயரில் சொந்த மாநில சினிமா பிரபலங்களையே பகைத்துக் கொண்டதன் விளைவு நடிகைக்கு தென்னிந்தியா முழுவதும் பட வாய்ப்புகள் ஒட்டுமொத்தமாக கிடைக்காமல் மற்ற இளம் நடிகைகளுக்கு சென்று விட்டதாகவும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: தடைகளை தாண்டி வந்து தமன்னாவை தொட்ட ரசிகர்!.. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?..

எல்லாத்துக்கும் காரணம் நடிகையின் வாய்க்கொழுப்புத் தான் என்றும் சில பாலிவுட் பட வாய்ப்புகள் கிடைத்ததும் தனது மார்க்கெட்டே உச்சத்துக்கு சென்று விடும் என்றும் இனிமேல் பாலிவுட்டை நம்மைத் தவிர எந்தவொரு நடிகையையும் முன்னணி நடிகர்கள் புக் செய்ய மாட்டார்கள் என்கிற அளவுக்கு பகல் கனவு கண்டு வந்த அந்த மந்தமான நடிகைக்கு எல்லாமே கடைசியில் ஏமாற்றமாகவே முடிந்து விட்டதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகைக்கு கடைசியாக பெரிதாக கைகொடுத்த அந்த பூ படமும் அடுத்த பாகம் ரெடியாக இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என அதிர்ச்சியளிக்க நடிகைக்கு கைவசம் வேறு எந்த படமும் இல்லையே என ரொம்பவே கவலையில் ஆழ்ந்து விட்டாராம். காதலருடன் மீண்டும் ஃபாரீன் டூருக்கு சென்று விட்டு வரலாமா? என நினைத்தாலும், இப்போதைக்கு காதலர் தனது அடுத்த படமாவது வெளியாகி ஓட வேண்டும் என்கிற குறிக்கோளுடன் அதற்கான வேலைகளில் படு பிசியாகி உள்ள நிலையில், நடிகையை கொஞ்சம் கூட கண்டுக் கொள்ளவில்லை என்கின்றனர்.

இதையும் படிங்க: பட வாய்ப்புக்காக பல நாள் படுக்கையை பகிர்ந்தும் பிரயோஜனம் இல்லை!.. இயக்குநரால் நடிகை அப்செட்டாம்!..

சிறகடித்து பாலிவுட் பக்கம் பறந்த அந்த நடிகைக்கு அவர் நடித்து வரும் அந்தவொரு படம் ஹிட் கொடுத்தால் தான் அடுத்த பட வாய்ப்புகள் அங்கே எட்டிப் பார்க்கும் நிலை உள்ளதாகவும் கவர்ச்சி வாரிசு நடிகை ஒருவர் சமீப காலமாக நடிகைக்கு கிடைக்க வேண்டிய பெரிய படங்களை எல்லாம் வளைத்துப் போட்டு வரும் நிலையில், இந்த பக்கமும் வர முடியாமல், அந்த பக்கமும் அடுத்த படத்தை அடைய முடியாமல் அம்மணி அவஸ்த்தை பட்டு வருகிறாராம்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top