சிம்பு OK'ன்னா நாளைக்கே கல்யாணம் கட்டிப்பேன் - இளம் நடிகை பளீச்!
43 வயதாகியும் தமிழ் பெண் ரசிகர்களின் மன்மதனாக இருந்து வருபவர் சிலம்பரசன். இவர் இன்னும் இளம் பெண்களின் கனவு நாயகனாக இருந்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக காதல் திரைப்படங்களில் நடித்து பெண் ரசிகைகளை தன் வசப்படுத்தியவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளிவந்த காதல் அழிவதில்லை, மன்மதன், கோவில், குத்து, சரவணன், வல்லவன், சிலம்பாட்டம் கோவா, வானம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் இன்றைய ரசிகர்களின் ஃபேவரட்டான திரைப்படங்களாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இளம் நடிகையான யுவிகா சிலம்பரசன் ஓகே சொன்னால் நாளைக்கு நான் அவரை திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன். சிம்பு உங்களுக்கு ஓகே என்றால் நான் ரெடி. நீங்க இப்பவே வந்து எங்க வீட்ல பொண்ணு கேட்கலாம். நான் திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன் என்று வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார் .
இவ்வளவு தீவிரமான ஒரு ரசிகைக்கு சிம்பு ஓகே சொல்வாரா? நாங்களும் அவருக்கு கல்யாணம் பண்ணி பார்க்க ரொம்ப நாளா ஆசைப்பட்டு இருக்கிறோம் என அவரது ரசிகர்கள் கேட்டு கமெண்ட் செய்து வருகிறார்கள்.
