×

மூக்கும் முழியும் உங்கள மாதிரியே இருக்கான்... மகனை வெளியுலகிற்கு காட்டிய  ஏ எல் விஜய்!

இயக்குனர் ஏ எல் விஜய் முதன்முறையாக தனது மகனை வெளியுலகிற்கு அறிமுகம் செய்துவுள்ளார்.

 

தயாரிப்பாளர் ஏ எல் அழப்பனின் இரண்டாவது மகனான  ஏ எல் விஜய் மலையாள இயக்குனர் பிரியதர்ஷனிடம் உதவியாளராக பணியாற்றி பின்னர் தமிழில் கிரீடம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் மதராசப்பட்டணம், தெயவ திருமகள் மற்றும் தலைவா ஆகிய படங்களின் மூலம் பிரபலமானார்.

இடையில் நடிகை அமலா பாலுடன் காதல் ஏற்பட அவரைத் திருமணம் செய்துகொண்டு ஒரே ஆண்டில் விவாகரத்து செய்தார். இதையடுத்து ஏ.எல் விஜய்  ஐஸ்வர்யா  என்ற பெண் மருத்துவரை கடந்த வருடம் 2வது திருமணம் செய்து கொண்டார். கடந்த 4 நாட்களுக்கு முன்னர் தான்  விஜய்- ஐஸ்வர்யா தம்பதிக்கு அழகிய ஆண் மகன் பிறந்தான்.  ரசிகர்கள் , பிரபலங்கள் என பலரும் அப்பாவான விஜய்க்கு வாழ்த்துக்கள் கூறினர்.

இந்நிலையில் முதன்முதலாக மருத்துவமனையில் தனது மகனை கையில் ஏந்தியிருக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மூக்கும், முழியுமாக அப்படியே அப்பாவை உரிச்சி வைச்சிருக்கான் என கமெண்ட்ஸ் செய்து அனைவரும் விஜய்க்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் முதன்முதலாக மருத்துவமனையில் தனது மகனை கையில் ஏந்தியிருக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மூக்கும், முழியுமாக அப்படியே அப்பாவை உரிச்சி வைச்சிருக்கான் என கமெண்ட்ஸ் செய்து அனைவரும் விஜய்க்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News