×

உன் முன்னாடி அந்த புள்ள கொஞ்சம் அழகு கம்மி தல... லைக்ஸ் குவியும் சிம்பு புகைப்படம்

நடிகர் சிம்புவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
 

சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகர் சிம்பு. இவரை சுற்றி பல விமர்சனங்கள் சுற்றிக்கொண்டிருந்தாலும் தனக்கு பிடித்ததை தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர். விரைவில் இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

இந்நிலையில், ராஜ உடையில் கையில் வால் பிடித்தபடி அவர் நிற்கும் சில புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. 2020 வருடத்திற்கான ஒரு காலண்டர் டிசைனுக்காக இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், ஒரு வெளிநாட்டு அழகியுடன் சிம்பு நிற்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதைக்கண்ட சிம்பு ரசிகர்கள் ‘ உன் முன்னாடி அந்த புள்ள கொஞ்சம் அழகு கம்மி தல’ என பதிவிட்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News