×

உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா அமைச்சர் – கொரோனா சிகிச்சை முடிந்து பொது நிகழ்ச்சியில் பங்கேற்பு!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன் கொரோனா சிகிச்சை முடிந்து குணமான அன்றே பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

 

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன் கொரோனா சிகிச்சை முடிந்து குணமான அன்றே பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு கொரோனா தொற்று அதிகமாகிக் கொண்டே வந்து இப்போது 1.5 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவரான தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகனுக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக கொரோனா தொற்று உறுதியானது.

அதையடுத்து அவருக்கு தனியார் மருத்துவமனியில் 10 நாட்களுக்கு மேல் அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவர் குணமாகி நேற்று வீடு திரும்பினார்.  இது போல சிகிச்சையில் குணமானாலும் இரண்டு வாரங்களாவது தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்றும் கொரோனா தொற்றாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டு வந்தது.

ஆனால் அமைச்சரோ நேற்று மாலையே சென்னை பிர்லா கோலரங்கத்தில் நடந்த பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். இது இப்போது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. அமைச்சரே இப்படி மருத்துவர்களின் அறிவுரையை மீறலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News