கென் கருணாஸின் இமாலய சாதனை: ரூ. 50 கோடியை கடந்த யூத்

 
கென் கருணாஸின் இமாலய சாதனை: ரூ. 50 கோடியை கடந்த யூத்

தமிழ் சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி வசூலில் பட்டையை கிளப்பும் படங்கள் சமீபகாலமாக சாதனை நிகழ்த்தி வருகின்றன. சமீபத்தில் வந்த வித் லவ், தாய் கிழவி வரிசையில் கென் கருணாஸ் நடித்த யூத் படமும் இணைந்துள்ளது.

கென் கருணாஸ் இயக்கி நடித்து வெளிவந்திருக்கும் படம் யூத். படம் வெளிவருவதற்கு முன்பே படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறப்பட்ட நிலையில் படம் வெளியாகி சக்கை போடு போடுகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இந்த படம் ரூ 5.5 கோடி செலவில் உருவானது இப்படம்.

யூத் வெளியான முதல் நாளில் சுமார் 3 கோடி ரூபாய் வசூலுடன் தனது கணக்கைத் தொடங்கிய யூத் , பார்வையாளர்களின் பாசிடிவ் விமர்சனங்களால் அடுத்தடுத்த நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் வசூல் அதிகரித்தது.

கென் கருணாஸின் இமாலய சாதனை: ரூ. 50 கோடியை கடந்த யூத்

இந்த நிலையில் படம் வெளியான 11 நாட்களில் உலகளவில் சுமார் ரூ. 50.26 கோடியை வசூலித்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. படக்குழு இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் 2026-ஆம் ஆண்டில் மிக அதிக லாபம் ஈட்டிய தமிழ் திரைப்படங்களின் பட்டியலில் 'யூத்' முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.

From Around the web