200 மில்லியன் பார்வையாளர்களை கடந்த முட்ட கலக்கி பாடல்
கென் கருணாஸ் இயக்கி நடித்து வெளிவந்த படம் யூத். பள்ளி பருவத்து காதல், நட்பு, குடும்ப செண்டிமெண்ட் என அனைத்தையும் கூடவே
Jun 3, 2026, 21:03 IST
கென் கருணாஸ் இயக்கி நடித்து வெளிவந்த படம் யூத். பள்ளி பருவத்து காதல், நட்பு, குடும்ப செண்டிமெண்ட் என அனைத்தையும் கூடவே நகைச்சுவையை தூவி கொடுத்ததால் மிகப்பெரிய வெற்றியை பெற்றது இந்த படம். 5 கோடி ரூபாயில் தயாரான யூத் கிட்டதட்ட ரூ 82 கோடி வரை வசூல் செய்தது. இந்த ஆண்டில் வெளியான டாப் வசூல் படங்களில் யூத் படமும் ஒன்று.
யூத் வெற்றிக்கு மற்றுமொரு முக்கிய காரணம் ஜி.வி.பிரகாஷ் இசையும். அனைத்து பாடல்களும் ஹிட் ரகங்கள். குறிப்பாக முட்ட கலக்கி பாடல் நீண்ட நாட்களாக டிடெண்டிங்கில் இருந்தது. பலரும் இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் இந்த பாடல் யூடியூப்பில் 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்துள்ளது. இதனை ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
