Categories: Cinema News latest news

இந்தா நீயே அடிச்சிக்க… இன்ஸ்டா சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா!…

Yuvan: இசையமைப்பாளர் யுவன் திடீரென இன்ஸ்டாவில் இருந்து வெளியேறினார் என்ற தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்தது. தற்போது அதற்கு யுவன் ஷங்கர் ராஜா தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ் சினிமாவில் மெலோடி பாடல்களுக்கு கிங் இளையராஜா. அவரின் வாரிசான யுவன் தானும் சளைச்சவன் இல்லை என்பதை சொல்லாமல் காட்டினர். அவரின் பாடல்களுக்கென்றே இளைஞர் கூட்டம் அதிகளவில் இன்றளவில் இருக்கின்றனர்.

இதையும் படிங்க: குருவுக்காக சிஷ்யன் செஞ்ச வேலையை பாருங்க.. ஷங்கர் இல்லத் திருமணத்தில் முகத்திரையை கிழித்த அட்லீ

அவர் தற்போது கோலிவுட்டில் நிறைய படங்களுக்கு இசையமைக்காமல் இருக்கிறார். விஜயின் நடிப்பில் வெளியாக இருக்கும் கோட் திரைப்படத்திற்கு தான் இசையமைப்பு செய்து கொண்டு இருக்கிறார். அதன் முதல் பகுதியாக விசில் போடு பாடல் வெளியானது. விஜய் பாடிய அப்பாடல் பெரிய அளவில் வரவேற்பை பெற்றாலும் எல்லா பாடல்கள் போல பெரிய ரீச்சை கொடுக்கவில்லை.

இதனால் யுவன் ஷங்கர் ராஜா மீது விமர்சனங்கள் எழுந்தது. பாடலாசிரியர் மதன் கார்க்கியை ரசிகர்கள் தொடர்ச்சியாக ட்ரோல் செய்தனர். இதனை தொடர்ந்து, யுவன் ஷங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு இன்று முடங்கியது.

இதையும் படிங்க: தூக்கி வச்சு கொண்டாடுனாங்க.. ஆனா, ஒரே பாட்டில் காலி பண்ணிய கோட்…யுவன் கொடுத்த திடீர் ஷாக்!

ட்ரோல்களால் தான் யுவன் இந்த முடிவை எடுத்து இருக்கிறார் என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. ரசிகர்கள் பாட்டு நல்லா தானே இருந்துச்சு. எதுக்கு இப்படி அவரை கலாய்க்கணும் என கமெண்ட் தட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எனக்காக யோசித்தவர்களுக்கு ரொம்பவே நன்றி. இது டெக்னிக்கல் கோளாறு தான்.

 

என் டீம் இன்ஸ்டா கணக்கை மீட்க தொடர்ந்து முயற்சி செய்து கொண்டு இருக்கின்றனர். விரைவில் சரியாகிவிடும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். இதையடுத்து, ரசிகர்கள் ஹேட்டர்களை கலாய்த்து வருகின்றனர். இந்தா நீயே அடிச்சிக்க, இதெல்லாம் உனக்கு தேவையா என கமெண்ட் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily