Categories: Cinema News latest news

பீஸ்ட் பாடலை பங்கமாய் கலாய்த்த யுவன்.! வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு.!

சமீபத்தில் இணையத்தில் மிகவும் ட்ரெண்ட் ஆகி வருகிறது என்றால் அதுதளபதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் தான். இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் அனிருத் இசையில் வெளியான அரபிக் குத்து, ஜாலியா ஜிம்கானா, பீஸ்ட் மூட் ஆகிய பாடல்கள் இணையத்தில் தற்போது வரை பிரபலம் .

அனிருத் பாடல் அமைத்தால் , உடனே இணையவாசிகள், அந்த பாடல் எங்கிருந்து எடுக்கப்பட்டது என ஆராய்ந்து விடுகின்றனர். அதன் பின்னர், அப்படி அந்த பாடல்  அனிருத் இசையமைத்து இருந்த பாடல் போல ஒன்றாக இருந்தால்  உடனே இணையத்தில் போட்டு ட்ரெண்ட் செய்து விடுகின்றனர்.

அப்படி தான் பீஸ்ட் மூட் ஆன் எனும் தீம் மியூசிக் உடன் வரும் பாடல் வேறு ஒரு ஆங்கில  பாடல் போல இருகிறது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அந்த ஆங்கில பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது துபாய் விடியோவுடன் இணைத்து போட்டு உள்ளார்.

இதையும் படியுங்களேன் – பீஸ்ட் விஜய் பேசிய ‘சர்ச்சை’ வசனங்கள் மொத்த லிஸ்ட்.! ஒருத்தர கூட விட்டு வைக்கலயே.!

பீஸ்ட் மூட் பாடலுக்கு காப்பி என இணையவாசிகள் கூறி வரும் நிலையில், யுவனின் இந்த வீடியோ அதே அளவு ட்ரெண்ட் ஆகி வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா, துபாயில் நடந்த எக்ஸ்போவில் கச்சேரி நடித்தினார். மேலும் பல சினிமா பிரபலங்கள் துபாயில் நடந்த எக்ஸ்போவில் கலந்துகொண்டனர்.

 

Manikandan
Published by
Manikandan