Yuvan Shankar Raja: விஜயின் திரைப்படத்திற்கு பல வருடங்கள் கழித்து யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். அது அவருக்கு பெரிய மன உளைச்சலை கொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இசைஞானி இளையராஜாவின் மகன் என்றாலும் தனக்கான அடையாளத்தினை உருவாக்கியவர் யுவன் ஷங்கர் ராஜா. 15 வருடத்திற்குள் 100 படங்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார். இவர் இயக்கிய துள்ளுவதோ இளமை திரைப்படம் மிகப்பெரிய வைரலான நிலையில் புகழ் பெற்றார். கோலிவுட்டில் அதிக விரும்பப்பட்ட இசையமைப்பாளர்களில் ஒருவராக உருவெடுத்தார்.
இதையும் படிங்க: ஆச்சி மனோரமாவை நம்ப வைத்து ஏமாற்றினாரா நாகேஷ்!.. வெளியே வந்த ரகசியம்!..
முதன்முதலாக அரவிந்தன் திரைப்படத்திற்கு யுவன் இசையமைத்தார். அப்போது அவருக்கு 16 வயது. அந்த வயதில் இசையமைத்த முதல் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தான். 2000ல் இருந்து அவரின் திரை கேரியர் பெரிய அளவில் வளர்ந்தது. இளைஞர்களின் ஐகானாக மாறினார்.
ஆனால் யுவனுக்கு சில வருடங்களாக கோலிவுட்டில் பெரிய படங்கள் கிடைக்காமல் இருந்தது. இதற்கு முன்னதாக விஜய் நடித்த புதிய கீதை படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். புதிய கீதை படத்தில் பாடல்கள் மட்டுமே நல்ல ரீச்சை பெற்றது.
இதையும் படிங்க:சத்தமில்லாத எண்ட்ரி… இந்த வார ஓடிடி ரிலீஸில் இத்தனை படங்களா? சுவாரஸ்ய அப்டேட்…
அந்நிலையில் விஜயின் நடிப்பில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் முதல் சிங்கிள் விசில் போடு சமீபத்தில் வெளியானது. விஜய் படத்தின் முதல் சிங்கிள் பெரிய அளவில் வைரல் ஹிட்டாகும். ஆனால் விசில் போடு பெரிய அளவில் விமர்சனத்தினையே சந்தித்துள்ளது.
ரசிகர்களும் கமெண்ட் செக்ஷனில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவையும், மதன் கார்க்கியையும் வரிசையாக கலாய்த்து வருகின்றனர். இதில் கடுப்பான யுவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை டெலிட் செய்து இருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சர்ச்சை நாயகன்…
Ajith Vijay:…
OTT-யில் புதிய…
சிம்புவுடன் இணைந்த…
வடிவேலுவின் கோபம்…