Spider Man Brand New Day-க்காக ஜெண்டயா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?
ஹாலிவுட்டில் 'ஸ்பைடர்-மேன்: ஹோம்கம்மிங்' (Spider-Man: Homecoming) படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஜெண்டயா. இதில் ஹீரோவாக டாம் ஹாலண்ட் நடித்திருந்தார்.
இவர்கள் இருவரும் 'ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்' (Spider-Man: Far From Home) மற்றும் 'ஸ்பைடர்-மேன்: நோ வே ஹோம்' (Spider-Man: No Way Home) ஆகிய இரண்டு படங்களிலும் ஜோடியாக நடித்தார்கள். ஒரு கட்டத்தில் ரியல் லைஃபிலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
ஜெண்டயா நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன படம் 'தி ஒடிசி' (The Odyssey). கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஜெண்டயா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் தான் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day).
இதிலும் இவரது காதல் கணவர் தான் ஹீரோ. இப்படம் நாளை (ஜூலை 30-ஆம் தேதி) ரிலீஸ் ஆகிறது. தற்போது, இந்த படத்துக்காக ஜெண்டயா வாங்கிய சம்பளம் ரூ.77 கோடி என்று தகவல் கிடைத்திருக்கிறது.
