என்னையும் எம்ஜிஆரையும் அப்படி பேசலாமா? அதான் அப்படி பண்ணேன் - கஸ்தூரியை டோஸ் விட்ட லதா
பொதுவாக பழம்பெரும் நடிகை லதாவை எம்ஜிஆர் லதா என்றேஅழைத்து வந்தனர். எம்ஜிஆர் இயக்கிய படத்தில் முதன் முதலில் லதா அறிமுகமானதால் தொடர்ந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக எம்ஜிஆர் படங்களில் மட்டுமே ஒப்பந்தத்தில் நடித்து வந்தார் லதா. எம்ஜிஆர் உடன் சேர்ந்து கிட்டத்தட்ட 14 படங்கள் இணைந்து நடித்திருக்கிறாராம்.
அந்த ஒப்பந்தம் முடிந்த பிறகு தான் மற்ற நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்கினார் லதா. அந்தக் காலகட்டத்தில் இவரையும் எம்ஜிஆர்ையும் சேர்த்து பல கிசு கிசுக்கள் வந்திருக்கின்றன. ஆனால் அதை எல்லாம் நான் பொருட்படுத்தவே மாட்டேன் என்று லதா கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : ஏற்கெனவே வாங்கிய அடி பத்தாதா? மீண்டும் எமனுகிட்ட ஆசி வாங்க ஆசைப்படும் ஜிவி – இப்படி ஒரு முடிவா?
அதுமட்டுமில்லாமல் ரஜினியுடனும் லதா பல விஷயங்களில் கிசுகிசுக்கப்பட்டு இருக்கிறார். அதையும் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். நாம் அதைப் பற்றி நினைத்தால் தான் அது நமக்கு பெரிய விஷயமாக தெரியும். அதனால் அந்த கிசுகிசுவை பற்றி நான் என்றைக்குமே கவலைப்பட்டது இல்லை என்று கூறியிருக்கிறார்.
முதன் முதலில் லதா உடன் ரஜினி படத்தில் சேர்ந்து நடிக்கும் போது லதாவைப் பார்த்து தயங்கினாராம். ஏனென்றால் எம்ஜிஆருடன் நடித்த நடிகை. அவருக்கு சிகரெட் பிடிப்பது என்பது பிடிக்காது. மிகவும் டெரரானவர் என்றெல்லாம் லதாவை பற்றி ரஜினி இடம் கூறினார்களாம். அதன் காரணமாகவே முதல் நான்கு நாட்கள் லதாவுடன் ரஜினி பேசவே இல்லையாம். அதன் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்து மிகவும் ஜோவியலாக இருக்கிறீர்கள் என லதாவிடமே ரஜினி கூறினாராம்.
இதையும் படிங்க : ரஜினி நடிக்க வேண்டிய கதையில் நடித்த பாக்கியராஜ்!. கடைசி நேரத்தில் எல்லாமே மாறிப்போச்சி!..
இந்த நிலையில் தன்னைப் பற்றி ஒரு கிசுகிசு வந்தபோது நான் அதை தட்டி கேட்டிருக்கிறேன் என கூறியிருக்கிறார் லதா. அதை பற்றி கூறும் போது "என் கேரக்டரே வேற. ஒரு சமயம் நடிகை கஸ்தூரி கிரிக்கெட் பற்றிய விமர்சனத்தை twitter-ல் பதிவிடும் போது எம்ஜிஆர் லதாவை தடவுகிற மாதிரி தோனி பந்தை தடவிக் கொண்டிருக்கிறார் என பதிவிட்டிருந்தார்".
"அதைப் பார்த்து என் நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் என்னிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்து இதை எப்படியாவது நீ தட்டிக் கேட்க வேண்டும் என கூறினார்கள். நான் விட்டு விடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் அனைவரும் சொன்னதின் பேரில் கஸ்தூரிக்கு பதிலடி கொடுத்தேன். எம்ஜிஆர் யார் என்று தெரியுமா? அவரைப் பற்றி ஏன் இந்த மாதிரி எல்லாம் போடுகிறீர்கள்? என கொஞ்சம் அதிகமாக பேசினேன். உடனே கஸ்தூரி என்னிடம் மன்னிப்பு கேட்டார்." என இந்த ஒரு பழைய சம்பவத்தை ஒரு பேட்டியின் மூலம் பகிர்ந்தார் லதா.