Cinema News
தனுஷை அசிங்கப்படுத்தினாரா லதா ரஜினிகாந்த்?!.. விவாகரத்து பின்னாடி இவ்வளவு கதை இருக்கா!..
திரைத்துறையில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் சிலர் மட்டுமே திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ்ந்து வருகிறார்கள். ரஜினிகாந்த் – லதா, பாக்கியராஜ் – பூர்ணிமா, அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா என குறைவான உதாரணங்களே இருக்கிறது. அதேநேரம், காதல் திருமணம் செய்து கொண்டு பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த நட்சத்திர ஜோடிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.
கமல் – சரிகா, பார்த்திபன் – சீதா, பிரகாஷ்ராஜ் – லலித குமாரி, சமந்தா – நாக சைத்தன்யா, ராமராஜன் – நளினி, செல்வராகவன் – சோனியா அகர்வால் என பெரிய லிஸ்ட்டே இருக்கிறது. உருகி உருகி விரும்பி காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் ஒருகட்டத்தில் திருமண வாழ்க்கை இவர்களுக்கு கசந்துவிட்டது என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் 25வது படத்தை இயக்கப்போவது இவர்தானாம்!.. செம காம்போவா இருக்குமே!…
அப்படி பிரிந்த ஜோடிகளில் ஒன்றுதான் தனுஷ் – ஐஸ்வர்யா. குறுகிய காலத்திலேயே தொடர் வெற்றிகளை கொடுத்து சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்தார் தனுஷ். தனுஷின் போட்டி நடிகரை கோபப்படுத்தவே தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா என அப்போதே சொல்லப்பட்டது.
இந்த தம்பதிக்கு 2 மகன்கள் பிறந்து 17 வருடங்கள் ஆன நிலையில் சில வருடங்களுக்கு முன் இருவரும் பிரிந்து எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்தனர். சின்ன சின்ன சண்டையாக இருக்கும், இரு குடும்பத்தினரும் பேசி இருவரையும் சேர்த்து வைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: சொந்த படம் எடுத்த தமிழ் சினிமா நடிகர்கள்!. ஜெயித்தார்களா?.. ஆண்டியானார்களா?…
ஆனால், சமீபத்தில் இருவரும் நீதிமன்றத்தில் விவாகாரத்து கேட்டு மனு போட்டிருக்கிறார்கள். இதிலிருந்து இனிமேல் இருவரும் சேரவே மாட்டார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. துவக்கத்தில் இருந்தே தனுஷின் குடும்பத்தினரை ரஜினியின் மனைவியும், தனுஷின் மாமியாருமான லதா மதிக்கவில்லை என சொல்லப்படுகிறது.
தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜாவை ஒரு சம்பந்தி போலவே அவர் மதிப்பு கொடுக்கமாட்டாராம். மேலும், தனுஷ் ஒரு ஊதாரி. இப்படி செலவு செய்யும் தனுஷ் எதிர்காலத்தில் எப்படி ரஜினியின் சொத்துக்களை பராமரிப்பார் எனவும் அடிக்கடி கமெண்ட் அடித்தாராம் லதா. இந்த கோபத்தில்தான் போயஸ்கார்டனில் ரஜினி வீட்டுக்கு அருகிலேயே சுமார் 150 கோடி மதிப்பில் ஒரு பிரம்மாண்ட பங்களாவை தனுஷ் கட்டி அதில் தனது பெற்றோரை குடி வைத்தார் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.