6 மாதம் என்னை அட்ஜஸ்ட் பண்ண சொன்ன இயக்குனர்..! பாண்டியன் ஸ்டோர்ஸ் லாவண்யா செய்த ட்விஸ்ட்..!

by Akhilan |
6 மாதம் என்னை அட்ஜஸ்ட் பண்ண சொன்ன இயக்குனர்..! பாண்டியன் ஸ்டோர்ஸ் லாவண்யா செய்த ட்விஸ்ட்..!
X

Pandian Stores Lavanya: பாண்டியன் ஸ்டோர்ஸ் லாவண்யா தன்னுடைய பேட்டி ஒன்றில் அட்ஜெமெண்ட் குறித்து ரொம்பவே ஓபனாக சொல்லி இருக்கும் நிலையில் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் மூன்றாவது ரீப்ளேஸ்மெண்ட்டாக வந்தவர் தான் லாவண்யா. ஆனால் விஜே சித்ராவுக்கு பின்னர் அவர் தான் சரியாக செட்டானார். இதையடுத்து சமீபத்தில் இந்த தொடர் நிறைவு பெற்றது.

லாவண்யா மாடலிங்கில் பிஸியாக இருப்பவர். அவ்வப்போது பேட்டிகளையும் கொடுத்து வருகிறார். அப்படி அவர் கொடுத்த ஒரு பேட்டியில் தன்னுடைய கேரியரில் அட்ஜெமெண்ட்டை வைத்து சீண்டிய இயக்குனர்கள் குறித்து ஓபனாக சொன்ன விஷயங்கள் வைரலாகி இருக்கிறது.

இதையும் படிங்க: விஜய்க்கு ‘இளைய தளபதி’ பட்டத்தை கொடுத்தவர் யார் தெரியுமா?!.. ஒரு ஆச்சர்ய தகவல்!…

அதில், எனக்கு ரொம்பவே தெரிந்த ஒரு காஸ்டிங் இயக்குனர். ஒருமுறை என்னை காண்டெக்ட்டில் இருக்க சொன்னார். ஆனால் மற்றவர்கள் நினைப்பது போல சும்மா பேசும் காண்டெக்டாக இல்லை. அவனுடன் 6 மாதம் ஒன்றாக வாழ சொன்னான். அதுக்கு மேல் வேண்டாம் என்றான்.

அப்படி இருந்தால் நீ வேற லெவலுக்கு போய்டுவ. அது மட்டும் இல்லாமல் மீடியாவில் 3 நாள் பொண்ணுங்க பேரை சொன்னான். அவர்கள் ஒண்ணுமே இல்லாமல் இருந்தார்கள். இப்ப பாரு வீடு, கார் என செட்டில் ஆகிவிட்டனர் என்றான்.

இதையும் படிங்க: தலயே சும்மா இருக்கும் போது வாலுக்கு இந்த வாய் தேவையா..! பேச்சு தாங்க முடியாமல் ரத்னா எடுத்த திடீர் முடிவு..!

நீயும் அப்படி இருக்கலாம் என அவன் சொன்னபோது நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன். ஏன்னா நான் அப்போது தான் வளர்ந்து வந்தேன். நான் அவனை முறைத்து என் பெயரை கெடுத்து கொள்ள விரும்பவில்லை. அதனால் அவனை எதிர்த்து பேசாமல் அமைதியாக நகர்ந்து விட்டேன் என்றார்.

Next Story