Connect with us

Cinema News

வெட்டியா பேசுறவங்கள கண்டுக்காதீங்க…- நெட்டிசன்கள் குறித்து லாரன்ஸ் சொன்ன குட்டி கதை!..

இசை வெளியீட்டு விழாக்களில் குட்டி கதை சொல்வது என்பது வழக்கமாகி வருகிறது. முன்பெல்லாம் விஜய்தான் இந்த மாதிரி இசை வெளியீட்டு விழாவில் கதை சொல்வார்.

ஆனால் தற்சமயம் லார்னஸும் அந்த வேலையை துவங்கியுள்ளார். நடிகர் லாரன்ஸ் அனைவருக்கும் உதவும் மனநிலை கொண்டவர். மாற்று திறனாளிகள் பலருக்கு லாரன்ஸ் உதவி வருகிறார். கொரோனா பாதிப்பு வந்த காலக்கட்டத்தில் கூட நிவாரண நிதிக்காக பெரும் தொகையை கொடுத்திருந்தார் லாரன்ஸ்.

தற்சமயம் லாரன்ஸ் நடிப்பில் வரவிருக்கும் திரைப்படம் ருத்ரன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் 150 ஆதரவற்ற குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக்கொண்டு அவர்களை தத்தெடுத்தார் லாரன்ஸ்.

லாரன்ஸ் சொன்ன குட்டிக்கதை:

அந்த இசை வெளியீட்டு விழாவில் ஒரு கதை சொன்னா லாரன்ஸ். முன்னொரு காலத்தில் ஒரு மனிதர் மக்களுக்கு அன்னதானம் செய்து வந்தார். இப்படி ஒரு நாள் அன்னதானத்திற்கு சாப்பாடு செய்துக்கொண்டிருக்கும்போது ஒரு கழுகு, பாம்பை தூக்கி கொண்டு அந்த பக்கமாக செல்ல பாம்பின் ஒரு துளி விஷம் அன்னதான சாப்பாட்டில் விழுந்துவிட்டது.

இதனால் அன்னதான சாப்பாட்டை சாப்பிட்ட சிலர் இறந்துவிடவே அரசர் அன்னதானம் போடுவதற்கு தடை விதித்துவிடுகிறார். இதை பார்த்த சித்திர குப்தன் இந்த இறந்தவர்களின் பாவத்தை யார் மீது எழுதுவது? என யோசித்துள்ளார். அதற்கு கடவு,. உணவு வழங்கியவர், கழுகு, பாம்பு இவர்கள் யாருமே பாவம் செய்யவில்லை. இப்போதைக்கு பாவ கணக்குகளை அப்படியே வை என்றார்.

பிறகு வெகுநாள் கழித்து அந்த மனிதர் மீண்டும் அன்னதானம் போட, அதை உண்ண முதியவர்கள் இருவர் வந்துள்ளனர். அப்போது அங்கு சும்மா அமர்ந்திருந்த நான்கு பேர் “அங்கு போய் அன்னதானம் சாப்பிட்டால் இறந்துவிடுவீர்கள்” என கூறி அவர்களை சாப்பிட விடாமல் செய்துள்ளனர்.

இதை பார்த்த கடவுள் அந்த பாவ கணக்குகளை இந்த நால்வர் மீது எழுது. இவர்கள் யாருக்கும் உதவியும் செய்ய மாட்டார்கள், மற்றவர்களையும் செய்ய விட மாட்டார்கள் என கூறியதாக ஒரு கதையை கூறியுள்ளார் லார்னஸ். பிறகு இது போலதான் சமூக வலைத்தளங்களில் நாம் செய்யும் நல்ல விஷயங்களை விமர்சிப்பவர்களும் எனவே அவர்களை கண்டுக்கொள்ளாதீர்கள் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: எந்த தமிழ் பொண்ணும் அப்படி சொல்லமாட்டாங்க! – குஷ்புவின் பேச்சுக்கு பதிலளித்த பயில்வான்…

google news
Continue Reading

More in Cinema News

To Top