அந்த ஒரு பிரச்சினை.. ‘விக்ரம்’ படத்தில் நடிக்க முடியாமல் போச்சு!.. நல்ல சான்ஸ மிஸ் பண்ணிட்டீங்களே மாஸ்டர்!..

by Rohini |   ( Updated:2023-04-15 11:06:34  )
vikram
X

vikram

கடந்தாண்டு லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் ‘விக்ரம்’. யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பதிவு செய்து கமலின் பெருமையை தூக்கி நிறுத்திய பெருமை லோகேஷை மட்டும் சேரும். கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் விக்ரம் படத்தில் கமலை செதுக்கி செதுக்கி நடிக்க வைத்திருக்கிறார்.

லோகேஷின் ஆர்வத்தை புரிந்து கொண்ட கமலும் விக்ரம் படத்தில் அவரின் எந்த ஒரு ஈடுபாடும் இல்லாமல் சுதந்திரமாக லோகேஷை பணிபுரிய வைத்தார். அதனாலேயே படம் மாபெரும் வெற்றியடைந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் மூலம் தான் லோகேஷ் யுனிவெர்ஸ் என்ற வார்த்தையும் பிரபலமானது.

மேலும் படத்தில் எத்தனை எத்தனை நடிகர்களை நடிக்க வைத்து சமமான போர்ஷன்களை கொடுத்து யாருக்கும் குறை இல்லாமல் படத்தை நிறைவு செய்தார் லோகேஷ். கமலை தவிர்த்து சந்தனமாக வந்த விஜய் சேதுபதி ஆகட்டும் ரோலக்ஸாக வந்த விக்ரமாகட்டும், அமீராக வந்த பகத் பாசில் ஆகட்டும் அனைவரின் ஸ்கீரின் ப்ரசன்ஸ் பார்ப்போரை மெர்சலாக்கியது.

இந்த நிலையில் சந்தனம் கதாபாத்திரத்தில் நான் தான் நடிக்க வேண்டியது என பிரபல நடிகரும் மாஸ்டருமான லாரன்ஸ் தெரிவித்திருக்கிறார். முதலில் லாரன்ஸை அணுகினாராம் லோகேஷ். ஆனால் லாரன்ஸிடம் தேதி பிரச்சினை இருந்ததாம். அதனால் தான் நடிக்க முடியவில்லையாம். ஆனால் அந்த படத்தை பார்க்கும் போதும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இதையும் படிங்க : இந்தா எடுத்துக்கோ- லோகேஷிடம் மட்டும் கர்ணனாக மாறிய விஜய்… இப்படியெல்லாம் பண்றாரா!

இருந்தாலும் அந்தப் படத்தை தான் மிஸ் பண்ணிட்டேன். ஆனாலும் லோகேஷின் தயாரிப்பில் ஒரு படத்தில் கமிட் ஆகியிருப்பதாக லாரன்ஸ் ஒரு பேட்டியின் போது கூறினார்.

Next Story