மூன்று ஆண்டு கால உழைப்பு!.. தன் தலைவனுக்காக விட்டுக் கொடுப்பாரா லாரன்ஸ்?..
தமிழ் சினிமாவில் க்ரூப் டான்ஸராக இருந்து ஒரு நடன இயக்குனராக வலம் வந்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ். தொடர்ந்து பல படங்களில் துணை நடிகராகவும் நடித்து இருக்கிறார். மேலும் இயக்குனராக ஒரு நடிகராக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார் லாரன்ஸ்.
நடிப்பது மட்டுமில்லாமல் அதன் மூலம் வருமானத்தில் பல சமூக உதவிகளையும் செய்து வருகிறார். அவரின் பாதுகாப்பில் ஒரு தொண்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதன் மூலம் பலருக்கு வாழ்க்கை கொடுத்து வருகிறார் லாரன்ஸ். காஞ்சனா படங்களின் வரிசைகள் மூலம் மிகவும் பிரபலமானார் லாரன்ஸ்.
இதனாலேயே திரில்லர் கலந்த பேய் படங்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது லாரன்ஸே ஆவார். காஞ்சனாவில் இருந்து காஞ்சனா 3 வரை, முனி, மொட்ட சிவா கெட்ட சிவா, போன்ற பல திரில்லர் படங்கள் தான் இவரின் கெரியரில் இவரை உயர்த்தியது.
இதையும் படிங்க :இது தான் பெஸ்ட் காம்போ.. ‘ஐயப்பனும் கோஷியும்’ தமிழ் ரீமேக்கில் நடிக்கப் போகும் அந்த பிரம்மாண்ட நடிகர்கள்
இப்போது சந்திரமுகி - 2வில் நடித்து வருகிறார். மேலும் ஃபை ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் ருத்ரன் படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் லாரன்ஸுக்கு ஜோடியாக நடிக்கிறார். கிட்டத்தட்ட இந்த ருத்ரன் படம் 2020ல் அறிவிப்பு வெளியாகி இன்று வரை இழுத்துக் கொண்டே இருக்கிறது.
கடைசியாக அடுத்த வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி ருத்ரன் திரைப்படம் திரைக்கு வரவிருப்பதாக அறிவித்து விட்டனர். ஆனால் இந்த படத்தின் ரிலீஸில் ஒரு சின்ன சிக்கல் இருப்பதாக திரைவட்டாரம் தெரிவிக்கின்றது. அதாவது அதே ஏப்ரல் 14 ஆம் தேதி ரஜினியின் ஜெய்லர் திரைப்படமும் வெளியாக இருக்கின்றதாம்.
ஆனால் ஜெய்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் மார்ச் வரை இருக்கும் என்பதால் ஓரளவிற்கு ஜெய்லர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் ஒருவேளை முடிந்து விட்டதால் சொன்ன தேதியில் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
இதையும் படிங்க : விஸ்வரூபமெடுத்த சொத்து பிரச்னை… கோர்ட் வரை சென்ற வழக்கு… சிவாஜிக்காக களமிறங்கும் கோலிவுட் சூப்பர்ஸ்டார்கள்…
சும்மாவே ரஜினியை தன் தாய்க்கும் அதிகமாக மதிப்பவர் லாரன்ஸ். ஒரு ரசிகனாக தீவிர பக்தி கொண்டவர். இப்படி இருக்கையில் தலைவன் படத்தோடு அவரின் படத்தை மோத விடுவாரா லாரன்ஸ் என்று கோடம்பாக்கத்தில் பேசி வருகின்றனர். மேலும் ஒரே தேதியில் மோதிக் கொள்ளுவதாக இருந்தால் கண்டிப்பாக லாரன்ஸ் அந்த தேதியில் ருத்ரன் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கமாட்டார் என்றும் கூறிவருகிறார்கள்.