ஒரு முறை சொல்லிட்டா பின்வாங்குறதே இல்ல! தொடர்ந்து கேப்டன் குடும்பத்துக்காக உதவிக்கரம் நீட்டும் லாரன்ஸ்

Published on: July 3, 2024
lawrence
---Advertisement---

Lawrence: சமீப காலமாக தமிழ் சினிமாவில் இருந்து தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து மக்கள் மத்தியில் ஒரு சிறந்த மனிதர் என்ற பெயரையும் வாங்கி இருக்கிறார் நடிகர் லாரன்ஸ். ஆரம்பத்திலிருந்து இவர் பல உதவிகளை செய்து வந்தாலும் சமீப காலமாக இவர் செய்யும் இந்த நல்ல செயல்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆகியிருக்கிறது.

அதுவும் மாற்றம் என்ற பெயரில் ஒரு புதிய சேவையை ஆரம்பித்து அதன் மூலம் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கும் விவசாயிகளுக்கும் அவர்களுக்கு தேவையானதை செய்து கொண்டு வருகிறார் .அரசியலுக்கு வந்து தான் மக்கள் நலனில் பங்கேற்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது என்பதை லாரன்ஸ் தன்னுடைய செயல்கள் மூலம் உடைத்து இருக்கிறார்.

இதையும் படிங்க: ‘தல’யோட வார்த்தைக்காகத்தான் வெயிட்டிங்! புது குண்டா தூக்கிப் போட்ட எச்.வினோத்

அதுவும் சொந்த செலவில் இவ்வளவு உதவிகளை எப்படி அவரால் ஒரே ஆளாக நின்று செய்ய முடிகிறது என்ற ஒரு ஆச்சரியமும் ஏற்படுகிறது. இந்த நிலையில் விஜயகாந்த் இறந்த பிறகு அவர் திடீரென ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில்  ‘விஜயகாந்த் எத்தனையோ பேருக்கு எத்தனையோ உதவிகளை செய்து இருக்கிறார். மக்களுக்காக மட்டுமல்லாமல் நடிகர்களின் வளர்ச்சிக்கும் விஜயகாந்த் ஒரு வகையில் உதவி இருக்கிறார்.

அதனால் அவருடைய மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் வளர்ச்சிக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்’ எனக் கூறி  ‘அவர் நடிக்கும் படைத்தலைவன் படத்தில் ஒரு கேமியோ ரோலில் என்னை நடிக்க கூப்பிட்டால் நான் கண்டிப்பாக நடித்துக் கொடுப்பேன்’ எனக் கூறியிருந்தார். அவர் கூறியதைப் போல அந்த படத்தில் ஒரு கேமியோ ரோலில் லாரன்ஸ் நடித்திருக்கிறார் என்ற ஒரு தகவல் வெளியானது.

இதையும் படிஙக: கமலுக்கும் ஷங்கருக்கும் முரண்பாடு… ஆனா அவருக்கிட்ட அது இல்லையே…? என்னய்யா இங்க நடக்குது?

அது மட்டுமல்லாமல் அடுத்ததாக சண்முக பாண்டியன் இன்னொரு படத்திலும் நடிக்க இருக்கிறாராம். அந்த படத்தில் ஒரு செகண்ட் ஹீரோவாக அவருடன் சேர்ந்து லாரன்ஸ் சேர்ந்து நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படி சண்முக பாண்டியன் வளர்ச்சிக்கு ஒரு அப்பாவாக இருந்து விஜயகாந்த் என்ன செய்வாரோ அதை இப்போது லாரன்ஸ் செய்து வருகிறார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.