மீண்டும் ஒரு பழைய பாடலை ரீமேக் செய்யும் லாரன்ஸ்.. இது செம ஹிட்டாச்சே!
தமிழ் சினிமாவில் கடந்த 2000ம் ஆண்டு அஜித், சிம்ரன் நடித்த உன்னைக்கொடு என்னைத்தருவேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.இதன்பின் சில படங்களில் கேரக்டர் ஆர்டிஸ்டாக நடித்து வந்தார்.
அதன்பின் 'அற்புதம்' என்ற படத்தின்மூலம் கதாநாயகனாக உருவெடுத்தார். இதன்பின் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். கடந்த 2011ல் இவர் இயக்கி, நடித்து வெளியான காஞ்சனா படம் மூலம் தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமானார்.
சமீபத்தில் இப்படத்திற் ஹிந்தியில் கூட ரீமேக் செய்தனர். ஆனால், அங்கு கதையை சிறிது மாற்றியதால் படம் தோல்வியடைந்தது. தற்போது இவர் 'ருத்ரன்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் முதன்முறையாக இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.
இதன்படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைந்து படப்பிடிப்பை முடித்து இந்த ஆண்டு இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் பழைய பாடல் செய்ய உள்ளார்களாம். சி.எல்.ஆனந்தன், சச்சு நடிப்பில் 1962ல் வெளியான படம் வீரத்திருமகன்.
இப்படத்தில் இடம்பெற்ற 'பாடாத பாட்டெல்லாம்' என்ற பாடலை ரீமேக் செய்ய உள்ளார்களாம். இதற்காக ஒரு கோடியில் பிரமாண்ட செட் அமைக்க உள்ளார்களாம். ஏற்கனவே லாரன்ஸ், மொட்டை சிவா கெட்ட சிவா படத்தில் 'ஆடலுடன் பாடலைக் கேட்டு' என்ற பாடலை ரீமேக் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.