LCU ஷார்ட் பிலிமில் விக்ரம் ஹீரோவுடன் களமிறங்கும் ரோலக்ஸ் டீம்… மாஸ் அப்டேட்டா இருக்கும் போல!
Lokesh Kanagaraj: கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக இருக்கும் லொகேஷன் நாகராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் எல் சி யு ஷார்ட் பிலிம் நிறைய சர்ப்ரைஸ் தகவல்கள் இருப்பதாக தற்போது விஷயம் கசிந்திருக்கிறது. படத்தில் முக்கிய கேரக்டர்கள் குறித்த அப்டேட்களும் வெளியாகி இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கைதி. இப்படத்தை தொடர்ந்து அவர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால் இரண்டு படங்களில் இருந்த ஒற்றுமை ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது.
இதையும் படிங்க: நயன்தாரா மேல இவ்வளவு லவ்வா?!.. பிரதீப் படத்துக்கு வாங்கிய அட்வான்ஸில் விக்கி செய்த வேலை!..
இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்திற்கு எல் சி யு என்ற அடைமொழியை கொடுக்க முடிவு செய்தார். அந்த வகையில் சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படமும் எல் சி யு திரைப்படமாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் எல்சியுவிக்காக ஒரு ஷார்ட் பிலிமை இயக்கி வருவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். 20 நிமிடம் கொண்ட அந்த ஷார்ட் பிலிம் விரைவில் வெளியாகும் என அவர் அறிவித்திருந்த நிலையில் அதற்குண்டான அப்டேட்கள் வெளியாகாமலே இருந்தது.
இதையும் படிங்க: தாங்கிக்கொள்ள முடியாத பிரிவு தொடங்கி சென்னையை வெறுத்த தருணம் வரை… ரஜினி வாழ்க்கையின் ஸ்பெஷல்!…
இந்நிலையில் காளிதாஸ் ஜெயராமன் ஷார்ட் பிலிம் குறித்த முக்கிய அப்டேட்களை கசிய விட்டிருக்கிறார். இப்படத்தில் பிரபஞ்சன் மற்றும் அன்புவின் கதாபாத்திரம் முக்கிய இடம் பிடித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதில் பிரபஞ்சனாக காளிதாஸ் ஜெயராம் விக்ரம் திரைப்படத்தில் நடித்திருப்பார்.
அன்பு கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் கைதி படத்திலும் நடித்திருப்பார். நாங்கள் இருவரும் இணைந்து இந்த ஷார்ட் பிலிமில் நடித்திருக்கிறோம். இதை தவிர மற்ற தகவல்களை தன்னால் சொல்ல முடியாது. விரைவில் அதிகாரப்பூர்வ அப்டேட் வரும் என காளிதாஸ் ஜெயராம் தெரிவித்து இருக்கிறார். இதனால் கைதி மற்றும் விக்ரமின் தொடர்ச்சியாக இந்த ஷார்ட் பிலிம் அமையலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.