லெஜெண்ட் சரவணன் நடிப்பில் கடந்த 3ம் தேதி வெளியான படம் லீடர். எதிர்நீச்சல் , கொடி , கருடன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கிய இந்த படம் பாசிடிவான விமர்சனக்கள் வந்ததை அடுத்து திரையரங்குகளில் கூட்டம் அலை மோதியது.

லெஜெண்ட் சரவணனுடன் ஷாம், ஆண்ட்ரியா ஜெரெமையா, மலையாள நடிகர் லால், சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் வாரத்திலேயே ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் லீடர் படத்தில் இடம்பெற்ற அம்புலி ராக் பாடல் இன்று யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது.





