Categories: latest news tamil cinema gossips

டாப் நடிகரா இருந்தாலும் கால்ஷீட் குடுக்க முடியாது…. கெத்து காட்டும் ஒல்லி நடிகை… அதிர்ச்சியில் படக்குழு…!

தமிழ் ரசிகர்களின் பேவரைட் நடிகர் தான் அந்த டாப் நடிகர். தற்போது அவரது நடிப்பில் வெளியாகியுள்ள படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதே இயக்குனருடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள அந்த டாப் நடிகர் தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார்.

இயக்குனர் நடிகர் கதை என அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. ஆனால் படத்திற்கு நாயகியை மட்டும் இன்னும் முடிவு செய்யவில்லையாம். ஏனெனில் நாயகி விஷயத்தில் டாப் நடிகர் ஒரு சிறிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளாராம். அதன்படி தனது வயதிற்கு ஏற்றாற்போல் நாயகியை ஒப்பந்தம் செய்யுமாறு நடிகர் கூறிவிட்டாராம்.

இதனால் இயக்குனரும் டாப் நடிகருக்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். ஆனால் யாருமே கதைக்கு ஏற்றாற்போல் இல்லையாம். அதனால் இறுதியாக தற்போது மாஸ் நடிகரின் படத்தில் நடித்து வரும் ஒல்லி நடிகையிடம் இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.

ஆனால் ஒல்லி நடிகையோ என்னிடம் கால்ஷீட் இல்லை என கறாராக கூறி இயக்குனரை திருப்பி அனுப்பி விட்டாராம். அந்த டாப் நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்க பல நடிகைகள் போட்டி போட்டு வரும் நிலையில் ஒல்லி நடிகையின் செயல் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் அந்த நடிகை நினைத்தால் நிச்சயம் கால்ஷீட்டை அட்ஜஸ் செய்து டாப் நடிகருடன் இணைந்து நடித்திருக்க முடியும். ஆனால் ஏதே சில காரணங்களால் தான் ஒல்லி நடிகை அவருடன் நடிக்க தயங்குகிறார் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Published by
ராம் சுதன்