More
Categories: Cinema News latest news

கைவிரித்த முன்னணி இயக்குனர்கள்… எங்க அப்பாவுக்கு நான் தான் செய்வேன்… களத்தில் இறங்கிய சூரி.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளம் வருபவர் நடிகர் சூரி. இவர் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் “விடுதலை” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

Advertising
Advertising

இதற்கிடையில், இவருக்கு ஓர் பெரிய ஆசை வந்துள்ளது. அதாவது, இவரை வளர்த்து ஆளாக்கியுள்ள இவரது தந்தை முத்துசாமியின் வாழ்வை ஒரு திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று. சூரி அதற்கான வேளைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம்.

இதையும் படியுங்களேன்- இனி நீங்க எப்போ கூப்பிட்டாலும் நடிப்பேன் சார்… மிரண்டு போன சிம்பு.. புல்லரிக்க வைத்த அந்த இயக்குனர்.

அந்த படத்தின் கதையை முதலில் சூரி இயக்குனர் பாண்டிராஜை சந்தித்து கூறியுள்ளார். அதற்கு அவர் இல்லை, சூரி எனக்கு அடுத்தடுத்து பெரிய பட வேலைகள் இருக்கிறது என நழுவிவிட்டாராம்.

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான கேடி பில்லா கில்லாடி ரங்கா, இது நம்ம ஆளு, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களில் சூரி காமெடியையும், படத்தின் கதையையும் சிறப்பாக வடிவமைத்து இருப்பார் பாண்டிராஜ். இருந்தும் இயக்குனர் பாண்டிராஜால் சூரி கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டதாம். அதன்பிறகு இயக்குனர் ராமிடம் கேட்டுள்ளாராம். அவரும் பார்க்கலாம் என்பது போல தெரிவித்துவிட்டாராம் .

இதனை தொடர்ந்து நடிகர் சூரி கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கிய ஈரா சரவணனிடம் படத்தின் கதையை கூறி இதை படமாக எடுக்கவேண்டும் என கேட்டுள்ளாராம். அதற்க்கு ஈரா சரவணனும் சம்மதம் தெரிவித்துவிட்டாராம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Manikandan

Recent Posts