×

என்னடா இப்படி பந்த தேட விட்டுட்டீங்க – பீல்டர்களின் பரிதாப நிலை !

ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் பீல்டர்கள் கேலரிக்கு உள்ளே சென்று பந்தை தேடி எடுக்கும் நிலை ஏற்பட்டது.

 

ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் பீல்டர்கள் கேலரிக்கு உள்ளே சென்று பந்தை தேடி எடுக்கும் நிலை ஏற்பட்டது.

ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் கொரோனா பீதி காரணமாக ரசிகர்கள் இன்றி நடைபெற்று வருகிறது. இதனால் மைதானங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ருசிகரமான சில விஷயங்கள் நடைபெற்றன.

மைதானத்தில் ரசிகர்கள் இல்லாததால் சிக்ஸர்களுக்கு செல்லும் பந்துகளை பீல்டர்களே கேலரிக்கு சென்று எடுத்து வரவேண்டிய நிலை உருவானது. அதிலும் நியுசிலாந்து வீரர் அடித்த சிக்ஸர் ஒன்று பார்வையாளர்களின் சேர்களுக்கு எங்கோ சென்று விழுந்து விட அதை சிறிது நேரம் தேடிதான் எடுத்தார் ஆஸ்திரேலிய வீரர் ஆஸ்டன் ஆகர்.

இது சம்மந்தமானப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News