இறங்கி அடித்த அண்ணாச்சி!...லெஜெண்ட் 12 நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?...

by சிவா |
legend
X

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன் ஹீரோவாக நடித்து உருவான லெஜெண்ட் திரைப்படம் கடந்த ஜூலை 28ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியானது. மிகவும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

முதல் படத்திலேயே பான் இண்டியா ஸ்டார் ஆக ஆசைப்பட்ட அண்ணாச்சி அதிரடி ஆட்டம் ஆடினார். இப்படத்தின் புரமோஷனுக்காக ஆந்திரா, மும்பை, கேரளா, கர்நாடகா என பறந்து சென்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

legend

இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. விமர்சகர்கள் அண்ணாச்சியை கடுமையாக விமர்சித்தும், கிண்டலடித்தும் எழுதினர். நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்தனர். ஆனாலும், படத்திற்கான புரமோஷனை அண்ணாச்சி சரவணன் நிறுத்தவில்லை.

அண்ணாச்சியை கிண்டலடிப்பதற்காகவும், அவர் எப்படி நடித்திருக்கிறார் என்பதை பார்ப்பதற்காகவுமே பலரும் தியேட்டர் சென்று படங்களை பார்த்தனர். இந்நிலையில், இப்படம் வெளியாகி 12 நாட்கள் ஆகியுள்ள நிலைய்ல் இப்படம் இதுவரை ரூ.12 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Next Story