அந்த மாதிரி இந்த மாதிரி இல்ல.. வேற மாதிரி! அடுத்த படத்திற்கான முரட்டு லுக்கில் லெஜண்ட் சரவணா
Legend Saravana: சில தினங்களுக்கு முன்பு சூரியின் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கருடன். படம் வெளியாகி தாறுமாறாக ஓடியது. சூரியின் சினிமா வாழ்க்கையில் கருடன் திரைப்படம் ஒரு முக்கிய திரைப்படமாக அமைந்தது. வசூலிலும் சாதனை படைத்தது. இந்த நிலையில் கருடன் படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார் இந்த படத்திற்குப் பிறகு அடுத்ததாக லெஜெண்ட் சரவணனை ஹீரோவாக வைத்து ஒரு புதிய படத்தை உருவாக்க இருக்கிறார்.
வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் துரை செந்தில்குமார். ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல் என்ற படத்தை இயக்கினார். அந்தப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதற்கு அடுத்தபடியாக மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து காக்கி சட்டை என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு கொடி, பட்டாஸ் போன்ற படங்களையும் இயக்கியவர் துரை செந்தில்குமார்.
இதையும் படிங்க: பண்றத எல்லாம் பண்ணிட்டு சாரி வேற.. இமான் குறித்து சிவகார்த்திகேயன் சொன்ன விஷயம்
இந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை பதிவு செய்யாததால் மீண்டும் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். விடுதலை படத்தில் சூரியுடன் ஏற்பட்ட பழக்கம் இப்போது கருடன் திரைப்படம் உருவாக காரணமாக அமைந்தது. இந்த நிலையில் கருடன் படவெற்றியை தொடர்ந்து லெஜெண்ட் சரவணாவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார் துரை செந்தில்குமார்.
இந்த படத்திற்காக லெஜெண்ட் சரவணன் வேறு மாதிரி உருமாறி இருக்கிறார். அதுவரை ஒரு காமெடி பீஸ் ஆகவே காணப்பட்ட லெஜெண்ட் சரவணன் இந்தப் படத்திற்காக ஒரு புதிய லுக்கில் தன்னை தயார்படுத்தி இருக்கிறார். அவருடைய இந்த புதிய தோற்றம்தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: எல்லா அங்கிளிலும் செம ஹாட்டு!.. டாப் கிளாஸ் கிளாமரில் தூக்கி அடிக்கும் கீர்த்தி சுரேஷ்!..
ஒரு ஆக்சன் கலந்த படமாக இந்த படம் உருவாகும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதற்கான அந்த தோற்றம்தான் லெஜெண்ட் சரவணனிடம் காணப்படுகிறது. கருடன் படம் எப்பேர்பட்ட வெற்றியை பதிவு செய்தது என அனைவருக்கும் தெரியும். அந்த படத்திற்கு பிறகு துரைசெந்தில்குமார் இயக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.