இதுக்கே இப்படின்னா அடுத்த படம் என்ன தெரியுமா?......அண்ணாச்சியின் மாஸ்டர் பிளான் இதுதான்!...
சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன் ஹீரோவாக நடித்து உருவான லெஜெண்ட் திரைப்படம் இன்று தமிழ்,தெலுங்கு, கன்னடம்,மலையாளம்,ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. மிகவும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
சம்பளத்தை தவிர்த்து பெரிய நடிகர்களின் படங்கள் எத்தனை கோடிகளில் உருவாகுமோ அந்த பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்காக அண்ணாச்சி சரவணன் ஆந்தி,கேரளா,கர்நாடகா என பறந்து சென்று புரமோஷன் செய்தார்.
கேரளாவில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘டிரெய்லரை பார்த்தால் ரஜினி படம் போல இருக்கிறது. எனவே,சூப்பர் ஹீரோவாக நடிப்பீர்களா?’ என நிருபர் ஒருவர் கேட்க, அதற்கு அண்ணாச்சி ‘கண்டிப்பாக நடிப்பேன். எனது அடுத்த படமே ஒரு சூப்பர் ஹீரோ கதைதான். அப்படத்தை சர்வதேச அளவில் எடுத்து செல்வேன்’ என தெரிவித்துள்ளார்.
தனது அறிமுக படத்தையே பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து பேன் இண்டியா படமாக வெளியிட்ட அண்ணாச்சி அடுத்த படத்தில் என்ன செய்யப்போகிறார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.