அண்ணாச்சியும் அரசியலுக்கு வர ரெடியா? விஜய் பற்றி அவர் சொன்னத கேளுங்க

by Rohini |
saravana
X

saravana

Legend Saravanan: லெஜன்ட் சரவணன் இப்பொழுது பிரபல இயக்குனர் துரை செந்தில்குமார் உடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு தி லெஜெண்ட் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லெஜெண்ட் சரவணன் அவர் நடிக்கும் இரண்டாவது திரைப்படம் தான் துரை செந்தில்குமார் இயகக்கும் திரைப்படம் ஆகும்.

முதல் படம் மிகப் பிரமாண்ட செலவில் எடுக்கப்பட எதிர்பார்த்த அளவு படம் பெரிய அளவில் போகவில்லை. ஏகப்பட்ட ட்ரோலுக்கும் மீம்ஸுகளுக்கும் ஆளானார் சரவணன் அண்ணாச்சி. இருந்தாலும் மனம் தளராது நீண்ட நாட்கள் கேப் எடுத்துக் கொண்டு இப்போது மீண்டும் சினிமாவில் ஒரு புதிய பரிணாமத்தில் வந்து இறங்கி இருக்கிறார்.

இதையும் படிங்க: கப்பை எடுத்து வைங்கப்பா… உள்ளே வரும் முன்னாள் சர்ச்சை பிரபலம்… பிக்பாஸ்8 பரபர அப்டேட்…

அவருடைய தோற்றத்திலிருந்து ஆளே ஸ்டைலாக மாறி இந்த படத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது சென்னை விமான நிலையத்தில் அவரை சூழ்ந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள் அவரிடம் சில கேள்விகளை கேட்டனர். அதில் விஜயின் அரசியல் பற்றியும் கேள்விகளை கேட்டனர். அதற்கு பதில் அளித்த சரவணன் அண்ணாச்சி இந்த முறை மும்முனைப் போட்டி என்பது கண்டிப்பாக இருக்கும்.

யார் பெரும்பான்மை வாக்குகளை பெறுகிறார்களோ அவர்களே ஆட்சியை அமைக்க முடியும் என்று கூறியிருந்தார். அதன் பிறகு உங்களுக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறதா என்ற ஒரு கேள்வியை கேட்டு இருந்தனர் .

இதையும் படிங்க: மாமனாரு வழியில் மருமகனா? எகிறிகொண்டே போகும் பிரபலங்கள்… DD4 அப்டேட்..

அதற்கு பதில் அளித்த சரவணன் அண்ணாச்சி நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். என்னுடைய கொள்கைக்கு ஒத்துப் போகிற கட்சியுடன் கூட்டணி சேருவேன் என கூறி இருக்கிறார். ஏற்கனவே திராவிட கொள்கைகளை மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர் என்றும் கூறியிருக்கிறார் சரவணன்.

இன்னும் விஜய் அவருடைய கொள்கை என்ன என்பதை பற்றி இன்னும் அறிவிக்கவே இல்லை. அவர் சொன்ன பிறகு எப்பேர்ப்பட்ட ஒரு மாற்றம் அரசியலில் ஏற்பட போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Next Story