எஸ்.கே. தனுஷை விட கெத்து லெஜண்ட் அண்ணாச்சிதான்!.. கொளுத்திப் போட்ட பிரபலம்!
Legned saravana: சினிமாவில் யாருக்கு எப்போது அதிக வரவேற்பு கிடைக்கும் என சொல்லவே முடியாது. சூப்பர்ஸ்டாரான ரஜினியின் படங்கள் கூட ரசிகர்களை கவராமல் போகும். பாபா, லிங்கா, தர்பார், அண்ணாத்த என சொல்லிக்கொண்டே போகலாம். அதேநேரம், ஒரு புதுமுக நடிகரின் படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடிக்கும்.
லவ் டுடே, ஜோ, குட் நைட் என சொல்லிகொண்டே போகலாம். அவ்வளவு ஏன்?.. 2024 புது வருடம் துவங்கி வெளிவந்த பெரிய நடிகர்களின் படங்களே பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்வியது. ஆனால், மலையாள படமான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது.
இதையும் படிங்க: அண்ணன் வராரு! ‘கோட்’ படத்தில் தோனி.. வெங்கட் பிரபுவின் பதிவால் ரசிகர்கள் உற்சாகம்
தமிழ் சினிமாவில் 2024ல் கடந்த 8 மாதங்களில் அரண்மனை 4, மகாராஜா, ராயன், தங்கலான் ஆகிய 4 படங்கள் மட்டுமே சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. அதேபோல்தான், யுடியூப்பில் பாடல்கள் அதிக பார்வையாளர்களை பெறுவதும். யுடியூப்பில் பாடல்களை அதிகம் பேர் பார்ப்பதை துவங்கி வைத்தவரே தனுஷ்தான்.
அனிருத்துடன் இணைந்து அவர் உருவாக்கி பாடிய ‘ஒய் திஸ் கொல வெறி’ பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது. பல வெளிநாடுகளிலும் இந்த பாடலுக்கு பலரும் நடனமாடினார்கள். அதன்பின் விஜய், அஜித் படங்களின் டீசர், டிரெய்லர், பாடல் வீடியோக்கள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற துவங்கியது.
இதையும் படிங்க: கோபத்தில் முத்து… எழிலை நினைத்து அழுகும் பாக்கியா… மொக்கை வாங்கிய மயில்..
விஜயின் மாஸ்டர், பீஸ்ட், வாரிசு படங்களின் பாடல்கள் யுடியூப்பில் கோடிக்கணக்கான வியூஸ்களை பெற்றது. இந்நிலையில், யுடியூப்பில் லெஜண்ட் சரவணா படத்தின் டிரெய்லர் வீடியோ சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்திருக்கிறது. சிவகார்த்திகேயனின் அமரன் டிரெய்லர் இதுவரை 26 மில்லியன் (2.5 கோடி) பார்வையாளர்களையும், தனுஷின் ராயன் டிரெய்லர் 16 மில்லியன் (1.6 கோடி) பார்வையாளர்களையும் பெற்றிருக்கிறது.
ஆனால், லெஜண்ட் சரவணா முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமான லெஜண்ட் திரைப்படத்தின் டீசர் வீடியோ 33 மில்லியன் அதாவது 3.3 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். இந்த தகவலை டிவிட்டரில் பகிர்ந்துள்ள புளூசட்ட மாறன் ‘சிங்கம் எப்போதும் சிங்கம்தான்’ என பதிவிட்டிருக்கிறார்.