Cinema History
ஒரு தக்காளி பழத்தால் சென்சாரில் சிக்கி தூக்கப்பட்ட எம்.ஜி.ஆர் பாடல்!.. இப்படியெல்லாம் நடந்துச்சா!…
ரஜினியும் கமலும் இப்போது தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமையாக இருக்கிறார்கள். தொடர்ந்து அஜீத் ,விஜய் என இரு துருவங்கள் தங்களது ரசிகர்களுக்கு தங்களது படங்கள் மூலமாக விருந்தினை கொடுத்து வருகின்றனர். ரஜினி,கமலுக்கு முந்தைய தலைமுறையாக பார்க்கப்பட்டவர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி. இவர்கள் இருவரும் “கூண்டுக்கிளி” என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே இருவரும் இணைந்து நடித்தனர்.
இவர்கள் இருவருக்கும் தனித்தனியே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது உலகறிந்த உண்மையே. நடிப்பில் ஒரு பக்கம் சிவாஜி கலக்கி வர, தனது புரட்சிகரமான கருத்துக்களாலும், தனக்கென ஒரு விதமான ஸ்டைலையும் கொண்டு மறுபுறம் எம்.ஜி.ஆர் கலக்கி வந்தார்.
தனது நிஜ வயதை விட அதிகமான தோற்றங்களில் நடித்தும், அதில் பலவிதமான வித்தியாசங்களை காட்டியும் சிவாஜி ரசிகர்களை வந்தார். இவர்கள் இருவரின் படங்கள் ‘ரிலீஸ் ஆனாலே மாநிலம் முழுவதும் மிகப்பெரிய கொண்டாட்டம் தான் என சொல்லும் அளவில் தான் இருந்தது அந்த காலம். நடிப்பில் இருவருக்கும் மிகப்பெரிய போட்டி இருந்தாலும், நிஜ வாழ்வில் ஒருவரை, ஒருவர் விட்டுக்கொடுக்காமல் தான் வாழ்ந்து வந்தார்கள். இவர்களின் படப்பாடல்களும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருத்தப்பட்டதும் உண்டு.
கண்ணதாசன், வாலி என இருவரும் இவர்களுக்கு மாறி மாறி பாடல்களை எழுத அதற்கு ஏற்றார் போல எம்.எஸ்.வி., கே.வி.மகாதேவன் ஆகியோர் அதற்கு மெருகேற்றினர். எம்.ஜி.ஆர் நடிப்பில் வந்த ஒரு படத்தில் வரும் பாடலில் “உடம்பு தக்காளி பழம் போல ” என்ற பாடல் வரி தணிக்கை துறையால் மறுக்கப்பட, அதற்கு பதில் வேறு பாடலை படத்தில் வைத்து அசத்தினார்.
“கொடுத்து வைத்தவள்” என்கின்ற படத்தில் வரும் டூயட் பாடலின் இடையே வந்த இந்த வரிகள் வரவே, அந்த படத்திலிருந்தே பாடல் நீக்கப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆரின் “படகோட்டி” படத்தின் பாடல்கள் அனைத்தும் மெகாஹிட் ஆனது. அதே நேரத்தில் சிவாஜியின் “தெய்வ மகன்” படம் தியேட்டர்களில் வசூலை குவித்தும் வந்தது.
“படத்திற்கு ‘தெய்வ மகன்’ , பாடலுக்கு ‘படகோட்டி’ ” என சொல்லும் அளவுக்கு இந்த படங்கள் வேறு அளவில் ரசிகப்பெரு மக்களால் பேசப்பட்டது. இவர்கள் திரைப்படங்கள் மற்றும் நிஜவாழ்வில் எது செய்தாலும், அவர்களது ரசிகர்களால் வரவேற்கப்பட்டதே அவர்களது வெற்றிக்கான காரணமாக சொல்லப்படுகிறது.