Connect with us

Cinema News

அக்டோபர் 19க்கு முன்னாடி மொத்த லியோ படமும் ரிலீஸ் ஆகிடும் போல!.. அந்த விஷயத்தால் அப்செட்டான லோகேஷ்!..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது. ஆனால், அந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே மொத்த படத்தின் காட்சிகளும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகிடும் போல என விஜய் ரசிகர்கள் அடுத்தடுத்து வரும் லியோ பட நடிகர்களின் பர்த்டே லிஸ்ட்டை ஷேர் செய்து லோகேஷுக்கு பெரிய தலைவலியை கொடுத்து விட்டனர்.

மாஸ்டர் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய நிலையில், மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் இணைந்து நடித்துள்ள படம் தான் லியோ.

இதையும் படிங்க: தலீவனுக்கு தில்லை பார்த்தியா!.. எல்லாம் வடை ஃபேக்டரி ஓனர்களாம்.. பிரபலங்களை கதற விட்ட ப்ளூ சட்டை!

நடிகர்களின் பிறந்தநாளில் லியோ க்ளிம்ஸ்:

விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், அனுராக் காஷ்யப், மன்சூர் அலி கான் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ள நிலையில், படக்குழு சமீபத்தில் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு தரமான லியோ க்ளிம்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

லியோ பட நடிகர்களின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு க்ளிம்ஸ் வீடியோக்களை வெளியிடுவதை அறிந்துக் கொண்ட ரசிகர்கள் அடுத்தடுத்து அக்டோபர் 19 வரை எந்த எந்த லியோ பட நடிகர்களின் பிறந்தநாள் வருகிறது என ஒரு பெரிய லிஸ்டே எடுத்து சோஷியல் மீடியாவில் அடுத்தடுத்த அப்டேட்டுக்காக அடிப்போட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அப்பாவுடன் நடித்த ஹீரோயினை தூக்கிட்டுப் போன வாரிசு நடிகர்!.. ஹீரோயின் சான்ஸுக்காக இப்படியா?..

வரிசையாக வரும் லியோ நடிகர்களின் பர்த்டே:

வரும் செப்டம்பர் 10ம் தேதி அனுராக் காஷ்யப் பிறந்தநாள் வருகிறது. அதை தொடர்ந்து செப்டம்பர் 17ம் தேதி நடிகை பிரியா ஆனந்த் பிறந்தநாள், அதன் பின்னர் செப்டம்பர் 20ம் தேதி மிஷ்கின் பர்த்டே வருகிறது. கடைசியாக அக்டோபர் 16ம் தேதி மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ் பர்த்டேவும் வருகிறது.

இப்படி வரிசையாக வரும் பிறந்தநாள் விழாக்களுக்கு லியோ படக் காட்சிகளை வெளியிட்டால், மொத்த படமும் வெளியாகிடுமே என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top