இன்னைக்கு வரலனா அவ்வளவு தான் பாத்துங்கோங்க… எக்ஸில் வம்பு செய்யும் விஜய் ஃபேன்ஸ்… என்ன சேதி?

Published on: September 25, 2023
---Advertisement---

Leo Audio Launch: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்தின் ரிலீஸ் நெருங்கி வருகிறது. இந்நிலையில் படத்திற்கு இன்னும் 30 நாட்களுக்கு குறைவான நாளே இல்லாத நிலையில் தொடர்ச்சியாக அப்டேட் கொடுத்து வருகின்றனர். தற்போது விஜய் ஃபேன்ஸ் ஒரு சோகத்தில் வேறு இருப்பதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தின் சண்டைக் காட்சிகள் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு இக்காட்சிகளை இயக்கி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: தனி ஒருவன் 2 படத்தின் வில்லன் இவர் தானா? அடடே! இத நாங்க யோசிக்கவே இல்லையே! ரவியின் சர்ப்ரைஸ்!

செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் இப்படத்தினை தயாரித்து இருக்கின்றனர். படத்தினை வரும் ஆயுதபூஜை தின விடுமுறையை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவெடுத்து இருக்கின்றனர். படத்தின் ஆடியோ ரிலீஸ் செப்டம்பர் 30ந் தேதி நடத்தவும் படக்குழு முடிவு செய்து இருக்கிறது.

இதனால் கடந்த 19ந் தேதியில் இருந்து 30 நாட்கள் 30 அப்டேட் என்ற ரீதியில் படக்குழு தொடர்ச்சியாக அப்டேட் கொடுத்து வருகின்றனர். இதில் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் எக்ஸ் கணக்கில் இருந்து பல புதிய விஷயங்களும் சொல்லப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: விஜயிற்கு இந்த பழக்கமே கிடையாது… பார்த்ததும் ஷாக் ஆகிட்டேன்…! அனுஷ்காகே இப்டியா?

இந்நிலையில் செப்டம்பர் 30க்கு இன்னும் 5 தினங்களே இருக்கும் நிலையில் ஆடியோ ரிலீஸ் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அப்டேட்டும் வெளியாகவே இல்லை. ஜெய்லர் படத்தின் ஹுக்கும் வீடியோ சாங்கே வந்துட்டு, முடிந்த படத்துக்கே அப்டேட் எப்படி பக்காவா இருக்காங்க என தொடர்ச்சியாக விஜய் பேன்ஸ் சண்டை போட்டு வருகின்றனர்.

மேலும், இன்னைக்கு லியோ படத்தின் ஆடியோ ரிலீஸ் அப்டேட் தான் வேணும். இல்லைனா கோபமாகிடுவோம் என தொடர்ச்சியாக எக்ஸில் சண்டை போட்டு வருகின்றனர். செவன் ஸ்க்ரீன் என்ன செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கணும் மக்கா!

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.