Connect with us
leo

Cinema News

களைகட்டும் லியோ ஆடியோ லான்ச் வேலை!.. வெளியான வீடியோ!.. என்னென்னமோ சொன்னாங்களே!..

Leo audio launch: விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் லியோ. ஏனெனில் இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்பது முக்கிய காரணம். ஏனெனில், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்.

அதுவும் இவர் இயக்கும் படங்களை LCU என சொல்கிறார்கள். ஏனெனில் அவர் தனது சினிமா மூலம் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கிறார். அதுவும் இருண்ட, மர்மமான உலகை காட்டுகிறார். தற்போது விஜயை வைத்து அவர் இயக்கியுள்ள லியோ படமும் அந்த வகை படமாகத்தான் உருவாகியிருக்கிறது.

இதையும் படிங்க: இது அதுல்ல!.. போஸ்டர்களில் கோட்டை விட்ட லோகேஷ் கனகராஜ்!.. லியோ பரிதாபங்கள்!..

லியோ படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே, இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் சூடுபிடித்துள்ளது. விரைவில் இப்படத்தின் 2வது பாடல் வெளியாகவுள்ளது. மேலும், புது புது போஸ்டர்களும் வெளியாகி வருகிறது. முக்கியமாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வருகிற 30ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் விஜய் என்ன பேசப்போகிறார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி மதுரை, துபாய், மலேசியா என பல இடங்களிலும் நடத்த திட்டமிட்டு கடைசியில் அது சரிவராமல் சென்னையிலேயே நடத்த திட்டமிட்டனர். நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டனர். வருகிற 30ம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெறும் என சொல்லப்பட்டது.

இதையும் படிங்க: ‘ஜெயிலர்’லாம் அப்புறம்.. முதல்ல ஜவானை ஜெயிக்கணும்!. இது என்னடா லியோவுக்கு வந்த சோதனை!…

ஆனால், அதற்கான அனுமதி இன்னும் அரசால் கொடுக்கப்படவில்லை எனவும், திட்டம் மாற்றப்பட்டு நட்சத்திர ஹோட்டலில் நடக்கவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. அதோடு, இந்த படத்தின் வினியோக உரிமையை பெற விஜய்க்கு அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், இல்லையேல் நேரு அரங்கில் நிகழ்ச்சி நடத்த அனுமதி இல்லை என மிரட்டப்படுவதாகவும் கூட சமூகவலைத்தளங்களில் செய்தி பரவியது.

இந்நிலையில், நேரு விளையாட்டு அரங்கில் இந்த நிகழ்சிக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் வீடியோவும், சில புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இதைப்பார்க்கும் போது வருகிற 30ம் தேதி நேரு மைதானத்தில் லியோ பட இசை வெளியீட்டு விழா நடப்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: பட்ஜெட்டோ பல கோடி!.. பக்கா ஸ்கெட்ச்!. பேன் இண்டியா போஸ்டர்!.. கல்லா கட்டுமா லியோ!..

google news
Continue Reading

More in Cinema News

To Top