More
Categories: Cinema News latest news

கடைசியா அங்கேயே கைவச்சிட்டியே லோகி!.. லியோ அந்த சீன் அட்டுக் காப்பி!.. இதோ ஆதாரம்!..

விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த லியோ படத்தின் டிரைலர் நேற்று மாலை 6:30 மணிக்கு ரிலீஸ் ஆனது. யூடியூப் -இல் அந்த டிரைலர் இதுவரை 25 மில்லியன் வியூஸ் அள்ளி உள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்படி ஒரு லைப் டைம் சம்பவத்தை நடிகர் விஜய்க்கு செய்வார் என ரசிகர்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நிலையில், எதிர்பார்ப்புகளை மீறிய விஷயமாக லியோ டிரைலர் வெளியாகி வியூஸ் வேட்டை நடத்தி வருகிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க: விஜய் ரசிகர்களை நம்பி உள்ளே விட்டதுக்கு!.. உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிட்டீங்க.. தியேட்டர் காலி!..

நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பலரும் லியோ படத்தின் டிரைலரை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், லியோ ட்ரைலரை டிக்கட் செய்ய ஆரம்பித்துள்ள ரசிகர்கள், கடைசியாக லியோ தாஸ் தனது கையில் ரிவால்வரை லோட் செய்து சுடும் செம ஸ்டைலான காட்சி எங்கிருந்து சுடப்பட்டுள்ளது என்பதை ஆதாரத்துடன் பதிவிட்டு இதுவும் காப்பிதான் என அடித்து நொறுக்கி வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜை சுருக்கமாக லோகி என ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், ஹாலிவுட் படமான புல்லட் ட்ரெயின் படத்தில் இடம்பெறும் காட்சியை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி லோகேஷ் கனகராஜ் வைத்துள்ளார் என அஜித் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

இதையும் படிங்க: இதையும் ஃபேக் டிரெய்லர்னு கம்பு சுத்துங்க பார்க்கலாம்!.. ஆபாச வசனம் பேசும் விஜய்.. வெளுத்த ப்ளூ சட்டை!..

படமே ஹாலிவுட் படமான ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ் தான் என்றும் காட்சிகள் எல்லாம் ஹாலிவுட் படங்களின் இன்ஸ்பிரேஷன் தான் என ரசிகர்கள் கலாய்த்து வந்தாலும், தமிழ் சினிமா ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் லியோ படம் கண்டிப்பாக இருக்கும் என்றும் வசூல் வேட்டை கன்ஃபார்ம் என்றும் விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

 

Published by
Saranya M

Recent Posts