Leo Vijay: விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்திற்கு போட்டியாக தெலுங்கு தேசமும் தற்போது களமிறங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால் படத்தின் வசூலில் மிகப்பெரிய அடி விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதில் விஜயை அசைக்கவே முடியாது. கண்டிப்பாக வசூல் 1000 கோடி கூட வரும் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் லியோ. கமர்ஷியல் நாயகனான விஜய் தற்போது ஆக்ஷன் நாயகனாக உருவெடுத்து இருக்கிறார். இப்படத்தின் கடைசிக்கட்ட வேலைகள் முடிந்து படம் ரிலீஸுக்கு நெருங்கி இருக்கிறது.
இதையும் படிங்க:பிச்சை எடுக்கிறாரு ரஹ்மான்!.. சரியான ஃபிராடு.. டிக்கெட்டுகளை கிழித்து அசிங்கமா திட்டும் ரசிகர்கள்!..
ஜெய்லர் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமே படம் சோலோ ரிலீஸாக வெளியாகியது. அதனால் தொடர்ச்சியாக இரண்டு, மூன்று வாரங்கள் படம் மிகப்பெரிய வசூலை பெற்றது. இதனால் சின்ன சின்ன படங்களின் ரிலீஸ் கூட தள்ளிப்போனது.
ஆனால் தற்போது விஜயதசமி தின விடுமுறையில் லியோ படத்தினை வெளியிட படக்குழு அறிவித்து இருக்கிறது. அந்த படத்தின் முன் வியாபாரமே 450 கோடியை நெருங்கி இருக்கிறது. இதனால் அப்படத்தின் விநியோகிஸ்தர்களுக்கு 700 கோடி வசூல் அடைந்தால் மட்டுமே லாபமாக இருக்கும்.
இதையும் படிங்க: ஏற்பாடு செய்யத்தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் எல்லாம் எதுக்கு கச்சேரி நடத்துறாரு!.. மறக்கவே மறக்காது நெஞ்சம்!..
ஆனால் இப்படத்துக்கு போட்டியாக கன்னடாவில் இருந்து கோஸ்ட் படம் வெளியாக இருக்கிறது. சிவராஜ்குமார் திடீர் ட்ரெண்டாகி இருக்கும் நிலையில் அது லியோ படத்துக்கு பிரச்னையாக இருக்காது. ஆனால் தெலுங்கு தேசத்தில் இருந்து புஷ்பா 2 படம் வெளியாகும் என திடீர் தகவல்கள் வெளியானது.
பீஸ்ட் படத்துக்கு இணைந்து கே.ஜி.எஃப் படம் வெளியானதால் பட வசூல் பாதிக்கப்பட்டது. அதைப்போல, புஷ்பா வெளியானால் கண்டிப்பாக மிகப்பெரிய இடியாக அமையும் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் புஷ்பா படத்தில் இன்னமும் படப்பிடிப்பு இருப்பதால் கண்டிப்பாக லியோவிற்கு போட்டியாக வெளியாகாது என்றே கூறப்படுகிறது.
சுதாகொங்கரா இயக்கத்தில்…
விக்ரம் பிரபு…
தமிழ், தெலுங்கு,…
தமிழ் சினிமாவில்…