Connect with us

Cinema News

ரஜினிக்கு வெண்ணெய்!.. விஜய்க்கு மட்டும் சுண்ணாம்பா.. கத்தரி போடும் சென்சார்.. லியோ தலை தப்புமா?..

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் நான் ரெடி தான் பாடல் வரிகளுக்கு சமீபத்தில் கத்தரி போட்ட சென்சார் போர்டு அடுத்ததாக சண்டைக் காட்சிகளுக்கும் வேட்டு வைக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தலைவர் 171!. சன் பிக்சர்ஸ் மீது செம கடுப்பில் லோகேஷ் கனகராஜ்!.. இப்படி பண்ணலாமா?!..

இந்த மாதம் இறுதியில் செப்டம்பர் 30-ஆம் தேதி லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனிருத் இசையில் விஜய் பாடிய நான் ரெடிதான் பாடலில் இடம்பெற்ற ”மில்லி உள்ள போனால் கில்லி வெளில வருவான்” போன்ற சில வரிகள் நீக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் திரைப்படத்தில் பகத் பாசில் மனைவியாக நடித்த காயத்ரியின் தலையை வெட்டும் காட்சி இடம் பெற்றுள்ளது. மேலும் ரோலக்ஸ் என்ட்ரியின் போதும் ஒரு ஆளை மடக்கி போட்டு தலையை வெட்டுவார். இந்நிலையில், லியோ படத்தில் அதை விட படு பயங்கரமான சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: 39 வயசுலயும் சும்மா கின்னுன்னு இருக்கேன்!.. நீங்க என்னடா பாடி ஷேம் பண்றது.. பட்டாசா வெடித்த பிரியாமணி!

அதன் காரணமாக லியோ படத்தின் சண்டைக் காட்சிகளில் கத்தரி போடவும் தணிக்கை குழு தயாராக இருப்பதாக கூறுகின்றனர்.  இதன் காரணமாக லியோ படம் முழுதாக லோகேஷ் கனகராஜ் படமாக வெளியாகுமா என்பதிலேயே சிக்கல் இருப்பதாகவும் ஏ சான்றிதழ் வழங்ப்பட்டால் குடும்பத்துடன் படம் பார்க்க ரசிகர்கள் வரமாட்டார்கள் என்பதால், தணிக்கை குழு கட் செய்யும் காட்சிகளால் படம் பாதிக்குமா என்கிற நிலை உருவாகி உள்ளது.

ஆனால், சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒருத்தர் தலையை அப்படியே கத்தி எடுத்து ரஜினி வெட்டி வீசுவார். அந்த காட்சியை சில நொடிகள் அப்படியே நிறுத்தி நிதானமாக காட்டவே தணிக்கை குழு ஒப்புதல் அளித்திருந்த நிலையில், விஜய்க்கு ஒரு மாதிரியும் ரஜினிக்கு ஒரு மாதிரியும் பாரபட்சம் காட்டுகிறதா தணிக்கை குழு என அந்தணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top