‘லியோ’ ரிலீஸுக்கு வந்த சிக்கல்! சொன்ன தேதியில் வெளியிட முடியாமல் தவிக்கும் படக்குழு

LEO Hindi Release : விஜயின் லியோ படத்தின் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே நாள்தோறும் படத்தை பற்றிய அப்டேட்களை பார்ப்பீர்கள் என்று படக்குழு தெரிவித்தது.

அவர்கள் கூறியதை போல அவ்வப்போது ஏதாவது ஒரு அப்டேட் வந்தவண்ணம் இருக்கின்றது. நேற்று படத்தின் போஸ்டர் வெளியாகி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. பேன் இந்தியா படமாக உருவாக இருக்கும் லியோ படத்தின் ஹிந்தி ரிலீஸில் இப்போது ஒரு பிரச்சினை வெடித்திருக்கிறது.

இதையும் படிங்க: விஜய் இல்ல எனக்கு அஜித் தான்… ஆதிக் பலே கில்லாடிப்பா! அடிச்சா சிக்ஸர் தான் இனி!

அதாவது லியோ படம் கண்டிப்பாக 1000 கோடிவரை வசூல் செய்யும் என்று படக்குழு நம்பியிருந்தார்கள். 1000 கோடியை வசூல் செய்கிறதோ இல்லையோ ஜெய்லர் படத்தின் சாதனையாவது லியோ படம் முறியடிக்கும் என்று எதிர்பார்த்திருந்தார்கள்.

ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பிற்கு கிடைத்த ஆப்பு என்றே சமீபத்தில் நடந்த சம்பவத்தை கூறலாம். அதாவது படத்தின் ஹிந்தி வெர்சனை ரிலீஸ் செய்வதில் சில பல பிரச்சினைகள் உருவாகியிருக்கிறது. மும்பையில் மல்டி ப்ளக்ஸ் அசோசியேஷன் என்ற ஒரு அமைப்பு இருக்கிறதாம்.

இதையும் படிங்க: அஜித் படத்தில் நான் சொன்ன ஐடியாலாஜி! 7ஜி நாயகன் கொடுத்த சர்ப்ரைஸ் – ஹிட்டுக்கு காரணமே இவர்தானா?

அவர்கள் வைத்த வரையறைப்படி படம் ரிலீஸாகி 8 வாரங்களுக்கு பிறகுதான் படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டும் என்பது. அப்படி உள்ள படங்களின் ஹிந்தி வெர்சனை மட்டும்தான் ரிலீஸ் செய்வோம் என்று கூறியிருக்கிறார்களாம்.

ஆனால் லியோ படத்தை ஏற்கனவே நெட்ஃபிளிக்ஸிற்கு ஒரு பெரிய தொகைக்கு விற்றிருக்கிறார்கள். அதுவும் படம் ரிலீஸ் ஆகி 4 வாரங்களில் ஓடிடிக்கு கொடுத்து விடுவோம் என்ற ஒப்பந்ததில் கையெழுத்திட்டு விற்றிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: தலைகீழாக தான் குதிப்பேன்!… தீபாவளி ரேஸில் இணைந்த விக்ரம்… இப்போ இந்த விபரீத முயற்சி தேவையா?

இதனால் லியோ படத்தின் ஹிந்தி ரிலீஸ் என்பது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் தமிழில் ரிலீஸ் செய்வதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. ஹிந்தியில் ரிலீஸ் செய்யும் போது ஓவர் சீஸ் வசூல் அதிகமாக ஒரு 300 கோடி வரை கிடைக்கும். ஆனால் இப்பொழுது ஹிந்தி ரிலீஸ் இல்லை எனும் போது இந்த வசூல் தொகையில் கொஞ்சம் சறுக்கு ஏற்படும்.

அதனால் அந்த வகையில் 1000 கோடி என்பதில் வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இதே பிரச்சினைதான் ஜெய்லர் திரைப்படத்திற்கும் ஏற்பட்டதாம்.

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it