More
Categories: Cinema News latest news

லியோவில் த்ரிஷாவை வைத்து இப்படியொரு எல்சியூ கனெக்ட்டா?.. வெளியான செம மேட்டர்.. ஒருவேள இருக்குமோ?..

கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி உள்ளிட்ட நான்கு படங்களில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்த நடிகை திரிஷா ஐந்தாவது முறையாக லியோ படத்தில் இணைந்துள்ளார்.

லியோ திரைப்படம் எல் சி யூவா இல்லையா என்கிற கேள்வி கடைசிவரை ரசிகர்கள் மத்தியில் எழுந்து கொண்டே இருப்பது லோகேஷ் கனகராஜ் முன்னதாக செய்த சம்பவங்களின் சாட்சியாகவே உள்ளது.

Advertising
Advertising

இதையும் படிங்க: லியோவில் முக்கியமானதே இதுதான்!.. மிஸ் பண்ணிடாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க.. அண்ணாச்சியாக மாறிய லோகி!..

கைதி மற்றும் விக்ரம் படங்களை கனெக்ட் செய்த நிலையில் லியோ எல்சியூக்குள் வருமா? வராதா? என்றும் கமல்ஹாசன், ராம்சரண் போன்றோரின் கேமியோ இருக்க வாய்ப்பு இருக்கா என்றும் ரசிகர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை படத்தின் ரிலீஸ் நெருங்க நெருங்க அதிகரித்துக் கொண்டே போகின்றனர்.

இந்நிலையில், லியோ படத்தில் பார்த்திபன் ஆக விஜய் நடித்துள்ள நிலையில் அவரது மனைவியாக நடித்துள்ள திரிஷாவின் பெயர் சத்யா என குறிப்பிடப்பட்டுள்ளது. கைதி படத்தில் ஹரிஷ் பெரடி சத்யா எனும் வார்த்தையை குறிப்பிடுவதை கண்டுபிடித்து கண்டிப்பாக இது எல்சியூதான் என சூப்பரான முடிச்சு ஒன்றை போட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: எதை பார்த்தாலும் எச்சில் ஊறுதே!.. பூஜா ஹெக்டேவுக்கு பொறந்தநாள்.. பக்கா ட்ரீட் இதோ!..

இந்த அளவுக்கு லோகேஷ் கனகராஜ் டீட்டைல் பிடித்து வைத்திருந்தால் அது நிச்சயம் வேற லெவலில் தான் இருக்கும் என்றும் லியோ படம் ஸ்டாண்ட் அலோன் படமாகவே வந்தால்தான் நன்றாக இருக்கும் என்றும் ரசிகர்கள் மாறி மாறி தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், கமல் நடித்த சத்யா திரைப்படம் லோகேஷ் கனகராஜின் ஃபேவரைட் என்பதால் அந்த பெயரை பயன்படுத்தி இருப்பார் என்றும் கூறுகின்றனர்.

எதுவாக இருந்தாலும் இன்னும் 5 நாட்களில் படம் வெளியாகும் போது லியோ லோகேஷ் கனகராஜின் எல்சியூவுக்குள் வருகிறதா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

Published by
Saranya M

Recent Posts