‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா எங்க நடக்கப் போகுதுனு தெரியுமா? அட இத யோசிக்கவே இல்லையே?

leo
விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் முடிவடைந்த நிலையில் பேட்ச் வேலைகளுக்காக மறுபடியும் படக்குழு காஷ்மீர் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்தப் படத்தில் விஜய்க்கே கேமியோ ரோல் தான் போல என இணையத்தில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர். அந்தளவுக்கு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் இந்தப் படம் உருவாகி இருக்கின்றது. ஏற்கெனவே விஜயுடன் சேர்ந்து த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் போன்ற பல நடிகர்கள் நடித்திருந்த நிலையில்,

leo1
நடிகை மடோனா செபாஸ்டியன், தனுஷ் ஒரு முக்கியமான கேமியோ ரோலில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியானது. எப்படி இருந்தாலும் படம் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இதற்கிடையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டிருக்கின்றது.
இதையும் படிங்க : போதை ஊசி போட்டாரா? படம் தோல்விக்கு கார்த்திக்கின் இந்தப் பிரச்சினைதான் காரணமா?
ஆனால் நேரு ஸ்டேடியத்தில் வேண்டாம், வேறு எங்கேயாவது அவுட்டோரில் வைத்துக் கொள்ளலாம் என விஜய் சொன்னதின் பேரில் மலேசியாவில் நடத்த திட்டமிருந்தார்களாம். மலேசியாவில் ஒரு பெரிய ஸ்டேடியம் இருக்கிறதாம். கிட்டத்தட்ட 80000 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய க்ரவுண்டாக அந்த ஸ்டேடியம் அமைந்திருக்கிறதாம்.

leo2
சமீபத்தில் தான் அங்கு ஏ.ஆர். ரகுமான் இசை கச்சேரி நடத்தப்பட்டு மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனதாம். அங்கு தான் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென அந்த ஸ்டேடியத்தில் புதுப்பித்தலுக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறதாம். அது முடியவே அக்டோபர் மாதம் இறுதியாகிவிடுமாம்.
இதையும் படிங்க : அரசியல்வாதிகள் பொறுக்கிதான்! விஜய் அப்படி கிடையாது – சர்ச்சைக்குள்ளாகும் தயாரிப்பாளரின் பேச்சு
அதனால் வேறு இடத்தை தேடிக் கொண்டிருக்கிறார்களாம். ஒரு வேளை லண்டன், துபாய் அல்லது மதுரை , கோயம்புத்தூர் போன்ற இடங்களில் நடத்தலாமா என ஆலோசித்துக் கொண்டு வருகிறார்களாம்.