மத்தியில் குத்தினால் சும்மா விடுவார்களா? விஜயின் அந்தப் பேச்சால் லியோ படத்திற்கு வந்த ஆபத்து
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். நடிப்பையும் தாண்டி இவர் சமூகத்திற்காக பல செயல்களை முன்னெடுத்துக்கொண்டு செல்லும் சம்பவம் பலரையும் ஆச்சரியப்பட வைக்கின்றது. அந்த வகையில் நேற்று நடந்த கல்வி விருது வழங்கும் விழா ரசிகர்கள் பிரபலங்களை தாண்டி அரசியல் பிரமுகர்களையும் வாயடைக்க வைத்து விட்டது. ஏற்கனவே அரசியலில் முக்கால்வாசி தன்னுடைய இலக்கை அடைந்து கொண்டிருக்கும் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பாக நேற்று நடந்த விழாவையும் உன்னிப்பாக பார்க்க வைத்திருக்கிறார்.
தெளிவான பேச்சு
பொதுவாக அரசியல் சார்ந்த கூட்டங்கள் பெரும்பாலும் சில குறியீடுகளை மையப்படுத்தியே நடக்கும். அதேபோல விஜய் நடத்திய அந்த விழாவிலும் அவர் சில குறியீடுகளை பயன்படுத்தி இருக்கிறார். அரசியல் கூட்டங்கள் ஒருவரை ஒருவர் மறைமுகமாகச் சாடி பேசுபவையாக அமையும். அதில் விஜய் நேற்று தன்னுடைய தெளிவான பேச்சின் மூலமாகவும் நிதானமாகவும் தன்னுடைய கருத்தை முன் வைத்திருக்கிறார்.
இதுவரை விஜய் பேசிய பேச்சிலேயே நேற்று அவர் பேசிய அந்த பேச்சு தான் யோசிக்க வைத்திருக்கிறது. தான் என்ன செய்யப் போகிறேன். தன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றேன் என்பதை அந்த ஐந்து நிமிட பேச்சின் மூலம் தெளிவாக உணர்த்தி இருக்கிறார் விஜய். அதாவது முதலில் அவர் பாரதிய ஜனதா பக்கம் சாயப்போவதில்லை என்ற ஒரு குறியீடு கொடுக்கிறார். அது எப்படி எனில் பெரிய தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு இவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறிய விஜய் அதாவது பெரியார், காமராஜர் ,அம்பேத்கர் போன்றவர்களை குறிப்பிட்டு பேசினார். ஆனால் இவர்கள் அனைவரும் பாரதிய ஜனதாவின் கொள்கைகளுக்கு எதிரானவர்கள் .அதன் மூலமாக இவர் பாரதிய ஜனதா பக்கம் சாய மாட்டார் என்று தெரிகின்றது.
தமிழக அரசியலில் ஏற்படும் தாக்கம்
அதேசமயம் அந்த மூன்று பெயர்களை குறிப்பிட்ட விஜய் அண்ணாவின் பெயரை மட்டும் கூற தவறவிட்டார். அவர்தான் தமிழ்நாட்டின் அரசியலை மாற்றியவர். அவரை அவர் தெரிந்து விட்டாரா இல்லை வேண்டுமென்றே அவர் பெயரை குறிப்பிடவில்லையா என்று தெரியவில்லை. ஆனால் இது தமிழக அரசியலில் வெறும் பாதிப்பை ஏற்படுத்தும். நாடாளுமன்றத்தை ஒரு சமயம் கதிகலங்க வைத்ததின்அண்ணாதான். அவர் பெயரை குறிப்பிடாதது தமிழக அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படத்தான் செய்யும்.
இதே ஒரு வாஜ்பாய் பெயரையோ அத்வானி பெயரையோ அல்லது இப்போது மத்தியில் ஆளும் தலைவரின் பெயரையோ குறிப்பிட்டு பேசியிருந்தால் இன்று விஜயின் நிலைமையை வேற மாதிரி இருந்திருக்கும். ஆனால் இதிலிருந்து விஜய் ஒன்று மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும் .மோடி அரசு இரண்டாவது முறையாக ஆட்சி வர வரைக்கும் அரசியல் வேறு மாதிரி இருந்தது. விஜயகாந்த் கட்சிக்குள் நுழையும் போது இருக்கிற நிலைமையை எண்ணியே தான் விஜய் நினைத்துக் கொண்டிருக்கின்றார் .ஆனால் அந்த அரசியல் இப்பொழுது இல்லை. எல்லா அதிகாரங்களையும் தன் வசமே வைத்திருக்கின்றது மத்திய அரசு.
எல்லாத் துறைகளிலும் மத்திய அரசின் ஆதிக்கம் தான் இருக்கின்றது. ஏன் சென்சார் போர்டு வரைக்குமே அவர்களுடைய அரசாங்கம் தான் ஆளுமை நடத்திக் கொண்டு வருகின்றன. ஒரு வேளை விஜய்யின் இந்த பேச்சால் அவருடைய லியோ படத்திற்கும் பெரிய ஆபத்து கூட வரலாம். சென்சாரில் பெரிய அடி வாங்கவும் லியோ படத்திற்கு வாய்ப்பிருக்கின்றது. நிறைய காட்சிகளை கூட சென்சாரில் கட் செய்து விடுவதற்கும் வாய்ப்பு இருக்கின்றது. இப்படி பல சிக்கல்களை விஜய் சந்திக்க நேரிடும் என்று இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் உமாபதி ஒரு பேட்டியில் கூறினார்.
இதையும் படிங்க : தமன்னா செய்த சம்பவத்தால் தலையில் துண்டை போட்ட நெல்சன்!.. என்ன ஆனது?