Connect with us

Cinema News

போற போக்கை பார்த்தா தியேட்டர் பொழப்பும் போயிடும் போல!.. போலி டிக்கெட்.. லியோ ரிலீஸுக்கு வேட்டு?..

தியேட்டரில் பிளாக்கில் டிக்கெட் விற்பது குற்றம் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், டிக்கெட்டுகளை டூப்ளிகேட் செய்து விற்கும் கேவலமான சூழ்நிலை வந்துவிட்டது. இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் கச்சேரியில் வெளிச்சத்துக்கு வந்த இந்தத் திருட்டு மாபியா விஜயின் லியோ படஆடியோ லான்ச் ரத்தாகவே காரணமாக மாறிவிட்டது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் நடித்த படம் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதையும் படிங்க: நடிக்கிறதை விட்டுட்டு இந்த தொழில் செய்யப் போறாரா வலிமை பட நடிகை?.. அவரே போட்ட போஸ்ட்டை பாருங்க!..

தளபதி விஜய் படம் என்பதால் எப்படியாவது டிக்கெட்டை வாங்கி விட வேண்டும் என்கிற மனநிலையில் தான் ரசிகர்கள் அனைவரும் இருப்பார்கள். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு விஜய் ரசிகர்கள் என்னும் போர்வையில் சில விஷமிகள் திருட்டுத்தனமாக போலி டிக்கெட்டுகளை அச்சடித்து உள்ளனர்.

மதுரையில் உள்ள பிரபல திரையரங்கம் ஆன பிரியா சினிமாஸ் தங்கள் தியேட்டர் பெயரில் லி்யோ படத்துக்கு இப்பவே போலி டிக்கெட்டுகளை அச்சடித்து இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: இன்ட்ரோல பாசமலர் பாட்டு.. புடிச்சிட்டேன்.. லியோ ஹாலிவுட் காப்பியில்ல.. ஜெயிலர் பட காப்பி!..

மேலும், விஜய் ரசிகர்கள் போலி டிக்கெட்டுகளை வாங்கி ஏமாற வேண்டாம் என்றும் போலி டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு தியேட்டருக்கு வந்தால் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டீர்கள் அதற்கு நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பல்ல என்று அதிரடி காட்டியுள்ளது.

ஏ ஆர் ரகுமான் இசைக்கச்சேரியில் நடைபெற்றது போல டூப்ளிகேட் டிக்கெட்டுக்குகளுடன் தியேட்டருக்கு ரசிகர்கள் வந்தால் மேலும் பெரும் குழப்பம் நீடிக்கும் என்றும், இதன் மூலம் நினைவு படத்திற்கு மிகப்பெரிய வசூல் இழப்பு ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்து வருகின்றனர்.

மதுரையில் உள்ள தியேட்டருக்கே இந்த நிலைமை என்றால் சென்னை தியேட்டர்களின் நிலைமை என்ன? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. போலி டிக்கெட்டுகள் உலாவ தொடங்கிய நிலையில் தியேட்டரில் செக்கிங்கை பலப்படுத்தவும் பல தியேட்டர்கள் ஆயத்தமாகி உள்ளதாக கூறுகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top