More
Categories: Cinema News latest news

லியோ ப்ளாப் ஆகிடுமா?.. அடேய் உங்க லாஜிக்குல தீய வைக்க… கடுப்படிக்கும் விஜய் ரசிகர்கள்!

Leo Update: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் லியோ ப்ளாப் ஆகிவிடும் என ஒரு க்ரூப் ஒரு லாஜிக்கை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறது. அதை பார்க்கும் நமக்கே நடந்துவிடுமோ என்ற அதிர்ச்சியே தோன்றுகிறது உண்மை தான்.

வித்தியாசமான கதை சொல்வதில் கெட்டியான ஆள் லோகேஷ். முதல் படத்தில் தொடங்கி இன்று வரை அவருடைய எந்த படமும் லாஸ் ஆகவே இல்லை. மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என ஒன்னுக்கு இன்னொரு படம் பெரிய வெற்றியை தான் பெற்று வந்து இருக்கிறது. அதிலும் விக்ரம் திரைப்படம் ஒருபடி மேலே அசுர வெற்றி என்றே சொல்லலாம்.

Advertising
Advertising

இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: செழியனின் திருட்டுத்தனத்தை கண்டுப்பிடித்த பாக்கியா… செம பல்ப் வாங்கிய கோபி..!

அந்த நம்பிக்கையில் தான் விஜயின் லியோ படத்தில் களமிறங்கினார். லோகேஷ் மீது இருந்த நம்பிக்கை ஒரு பக்கம். விஜயின் மார்க்கெட் ஒரு பக்கம் என விநியோகிஸ்தர்கள் லியோவால் பெரிய லாபம் பார்க்கலாம் என நம்பி இருக்கின்றனர். முன் வியாபாரமே 500 கோடியை நெருங்கி விட்டது.

அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம், ரஜினி ரசிகர்கள் ஒரு பக்கம் என லியோ படத்தின் தோல்வியை கொண்டாட செம வெயிட்டிங்கில் இருக்கின்றனர். இந்நிலையில் தான் ஆடியோ லான்சை படக்குழு திடீரென ரத்து செய்தது. ஆனால் அதற்கு பின்னால் பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.  இது ஒரு வகையில் விஜய் இமேஜ் டேமேஜ் ஆகாமல் காப்பாற்றவும், விளம்பரமாக்கி லியோ படத்தினை ஓட்டிவிடலாம் என்ற ஐடியா தான் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நெல்சனுக்கு ஏன் இந்த விபரீத ஆசை! எல்லாம் ‘ஜெயிலர்’ வெற்றிதானா? கொஞ்சம் பாத்து பண்ணுங்க பாஸ்

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் ஆடியோ லான்ச் கேன்சல் ஆனது. அப்போதே நெல்சனுக்கு ரஜினி படத்தினை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் பீஸ்ட் தோல்வி படமாக அமைந்தது. அதேப்போல், லியோ படத்தின் ஆடியோ லான்ச் கேன்சல் ஆகிவிட்டது. லோகேஷும் ரஜினி படத்தினை இயக்க இருக்கிறார். இதே லாஜிக்கில் பார்த்தால் லியோ ப்ளாப் தானே ஆகும் என பலரும் கமெண்ட் தட்டி வருகின்றனர்.

Published by
Akhilan

Recent Posts