யாரு சூப்பர் ஸ்டார்ங்கிறது முக்கியம் இல்ல! ரேஸ்ல யாரு ஜெயிக்கிறானுதான் முக்கியம்! மாஸ் செய்த விஜய்

Published on: June 24, 2023
vijay
---Advertisement---

தமிழ் திரையுலகை பொருத்தவரைக்கும் வசூலில் போட்டோ போட்டி ரஜினிக்கும் விஜய்க்கும் இடையே அதிகமாக நடந்து வருகின்றன. இரண்டு பேரும் வசூல் மன்னனாக ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் வசம் வைத்திருக்கின்றனர். மற்ற நடிகர்களை விட இவர்களின் படங்களுக்கு தான் மவுசு அதிகம்.

vijay1
vijay1

அதுமட்டுமில்லாமல் இரண்டு பேருக்கும் இடையே அவ்வப்போது சில முரண்பாடான கருத்துக்களும் ரசிகர்களால் வந்து கொண்டும் இருக்கும். குறிப்பாக சூப்பர் ஸ்டார் என்ற பிரச்சனை ஒரு பெரும் புரளியையே கிளப்பி விட்டது. போகிற போக்கில் சரத்குமார் சூப்பர் ஸ்டார் என்று விஜயை சொன்னது பூதாகரமாக கிளம்பி இருந்தது.

அதை எதிர்த்து ரஜினி ரசிகர்கள் செய்த கலவரத்தை மறக்க முடியாது. அதே போல பிரபலங்களும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை ரஜினி பெறுவதற்கு என்ன மாதிரியான உழைப்பை கொடுத்திருந்தார் ?மறக்க முடியுமா? யாரும் யாருடைய பட்டத்தையும் மிக எளிதாக பெற முடியாது என்றும் பல விவாதங்களை முன் வைத்துக் கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் ரஜினியின் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படமும் விஜயின் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படமும் போட்டோ போட்டியில் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு படங்களை பற்றிய ஒரு புதிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கின்றது.

vijay2
vijay2

அதாவது ஜெயிலர் படத்தின் கேரளா தியேட்டரிக்கள் உரிமையை வெறும் நான்கு கோடி அளவிற்கு போய் இருக்கின்றதாம். ஆனால் விஜயின் லியோ திரைப்படத்தின் கேரளா தியேட்டரிக்கள் உரிமை பதினைந்து கோடி வரைக்கும் போய் இருக்கிறதாம். ஏற்கனவே விஜய்க்கு கேரளா ரசிகர்கள் குறிப்பாக பெண் ரசிகர்கள் ஏராளம். அதில் அவரின் படங்களை பற்றி சொல்லவா வேண்டும். இந்த விஷயத்தில் ரஜினியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் இருக்கிறார் விஜய்.

இதையும் படிங்க : அந்த எண்ணத்தையே சுக்குநூறாக உடைத்த இளையராஜா! ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.