இனி எல்லா படத்துலையும் இது இருக்கும்… திட்டவட்டமாக சொன்ன லோகேஷ்.. இதை லியோவில் கவனிச்சீங்களா..?

Leo Movie: தமிழ் படத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய லியோ படத்தின் மீதான சர்ச்சை இன்னும் அடங்கியபாடு இல்லை. தொடர்ச்சியாக பல யூகங்கள் கிளம்பி கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இன்னும் சில ஆச்சரிய தகவலும் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ முடிந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் 171வது பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தின் கதையை கேட்ட விஜய் கூட 10 நிமிட கதை கேட்டாலே எனக்கு பிடிக்காது. ஆனால் இது ரொம்பவே நல்லா இருக்கு என பாராட்டினராம்.

இதையும் படிங்க: இதென்ன லிப் லாக்? சிம்புவும் த்ரிஷாவும் அந்த சீனில் பண்ணிய அட்டகாசம் இருக்கே? உணர்ச்சிவசப்பட்டு என்னாச்சு தெரியுமா?

இந்நிலையில் இப்படத்தில் இருந்தே எல்சியூ இருக்கும். அதற்கடுத்த படங்களான விக்ரம் 3, கைதி 2, ரோலக்ஸ் ஆகிய படங்களிலும் எல்சியூ பட நடிகர்கள் இருப்பார்கள் எனத் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார். இதனால் ரசிகர்கள் மறுபடியுமா எனக் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

மேலும், விக்ரம் படத்தில் அமீரும் சத்யமங்கலம் அனாதை ஆசிரமத்தில் தான் தங்கி இருந்தார். அதைப்போலவே லியோ படத்திலும் பார்த்திபனும் ஆசிரமத்தில் தான் இருந்தார். இதனால் இருவருக்கும் எதுவும் கனெக்‌ஷன் கூட இருக்கலாம் என லோகேஷே கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: விக்ரமன் வீட்டில் ஒரே நேரத்தில் 15 மருத்துவர்கள்! தடாலடியாக பறந்த உத்தரவு – வைரலாகும் புகைப்படம்

இப்படத்தில் மாயா ஒரு கேரக்டரில் நடித்து இருந்தார். அவர் விக்ரமின் ஏஜெண்ட்டாக இருப்பதால் பார்த்திபனாக இருக்கும் லியோ தாஸை கவனிக்க அனுப்பி இருப்பார் கமல். இப்படி பல விஷயங்களை தன்னுடைய சமீபத்திய பேட்டியில் லோகேஷ் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story