விஜய் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் லியோ.. ஆத்தாடி இத்தனை கோடியா?!..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருப்பவர் விஜய், அவரின் ரசிகர்கள் இவரை தளபதி என செல்லமாக அழைக்கிறார்கள். தற்போது ரஜினியை விட அதிக சம்பளம் பெறும் நடிகராக விஜய் மாறியுள்ளார். ஏனெனில், அண்ணாத்த படத்தில் ரூ.118 கோடி சம்பளம் பெற்றார் ரஜினி. ஆனால், அந்த படம் சரியாக ஓடவில்லை. எனவே, தற்போது நடித்துவரும் ஜெயிலர் படத்திற்கு அவருக்கு ரூ.80 கோடி மட்டுமே சம்பளமாக பேசப்பட்டுள்ளது.
ஆனால், விஜய் ரஜினியின் அண்ணாத்த சம்பளத்தையே தாண்டிவிட்டார். அதனால்தான் அவரை சூப்பர்ஸ்டார் என பேச துவங்கியுள்ளனர். சமீபகாலமாக அவர் நடிக்கும் படங்களின் பட்ஜெட்டில் 75 சதவீதம் விஜயின் சம்பளமாகவே இருக்கிறது. அதனால் ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் செய்தால் மட்டுமே விஜய் படங்களில் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும் என்கிற நிலை உருவாகியுள்ளது. தியேட்டர், ஓடிடி, டிவி உரிமை, இசை உரிமை, டப்பிங் உரிமை விஜய் நடிக்கும் படங்கள் பல கோடிகளை வசூலிப்பதால் தயாரிப்பாளர்களும் துணிந்து அவ்வளவு கோடிகளை இறைத்து படம் எடுக்கிறார்கள்.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் லியோ திரைப்படம் இதுவரை விஜட் நடித்த படங்களை விட மிகவும் அதிக பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாம். இப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.350 கோடியிலிருந்து ரூ.375 கோடி வரை வரும் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் காஷ்மீரில் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அந்த செலவில் விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோரை வைத்து ஒரு புதிய படமே எடுத்துவிடலாம் என சொல்லப்படுகிறது.
மொத்தத்தில் தென் இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் என்கிற பெருமையை லியோ படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.