‘லியோ’ படத்துல இத்தனை சிறப்பு இருக்கா?.. த்ரிஷா பிறந்த நாளின் போது சர்ப்ரைஸை அவிழ்த்துவிட்ட படக்குழு..

by Rohini |   ( Updated:2023-05-05 00:54:47  )
trisha
X

trisha

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் திரிஷா நடிப்பில் தயாராகி வரும் படம் லியோ. கிட்டத்தட்ட விஜய்யும் திரிஷாவும் 16 வருடங்களுக்குப் பிறகு ஒன்றாக இணைந்து நடிக்கும் படமாக லியோ படம் அமைந்திருக்கிறது. ஏற்கெனவே கில்லி ,குருவி, ஆதி போன்ற படங்களில் இருவரும் ஜோடியாக நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றனர்.

20 வருடங்களாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் நடிகை திரிஷா இன்று தன்னுடைய பிறந்தநாளை தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்ந்தார். மேலும் பொன்னியின் செல்வனில் குந்தவையாக அவரின் நடிப்பு அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை அடுத்து லியோ படத்திலும் விஜய்யுடன் ஜோடி சேர்வது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் த்ரிஷாவின் பிறந்த நாளை முன்னிட்டு லியோ பட குழு விஜயும் த்ரிஷாவும் லியோ படபிடிப்பில் ஒன்றாக இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறது.

ஏற்கனவே விஜய்க்கு லியோ படம் 67வது படம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று .அதேபோல த்ரிஷாவுக்கும் லியோ படம் 67வது படம் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் லியோ பட குழு அறிவித்து இருக்கிறது.

இது மேலும் ரசிகர்களுக்கு மிகுந்த ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது .விஜயும் த்ரிஷாவும் 14 வருடங்களுக்குப் பிறகு ஒன்றாக இந்த படத்தில் இணைகிறார்கள். இருவருக்கும் இந்த படம் 67 வது படம் என்பதை அறிந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : சிவாஜி படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரபாபு!.. இது எப்ப நடந்துச்சுன்னு தெரியுமா?…

Next Story