அந்த படம் மாதிரியே இருக்கே?.. சூப்பர் ஹிட்டான பழைய பட சாயலில் LEO பட கதை? வெளியான செம தகவல்

Published on: May 15, 2023
---Advertisement---

பொங்கலுக்கு ரிலீஸ் ஆன வாரிசு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘லியோ’.

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இந்த படத்தில் இசையமைப்பாளராக பணிபுரிகிறார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளராக பிலோமின் ராஜ் பணிபுரிகிறார், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்குனராக தினேஷ் மாஸ்டரும் பணிகளை மேற்கொள்கிறார்கள்.



லியோ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S. லலித்குமார் தயாரித்து வருகிறார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த மாஸ்டர் படத்தினை தயாரித்தவர் ஆவார். இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக விஜய் மேனேஜர் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.

லியோ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர்
இந்த படத்தில் நடிக்கின்றனர்.

லியோ படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சன் டிவி கைப்பற்றி உள்ளது. ஆடியோ உரிமத்தை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

leo



இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி துவங்கிய சூழலில் காஷ்மீரில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று நிறைவடைந்தது. தற்போது சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. லியோ படம், அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய், இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. லியோ என்ற பெயரில் நிழல் உலக டான் கதாபாத்திரத்திலும், பார்த்திபன் என்ற பெயரில் சாக்லேட் தயாரிப்பாளர் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய், லியோ படத்தில் நடிக்கிறார்.

2016- ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்து வெளிவந்த தெறி படத்தில், ஜோசப் குருவில்லா எனும் பேக்கரி ஓனராகவும், விஜயகுமார் என்ற போலீஸ் அதிகாரியாகவும் இரண்டு கெட்டப்புகளில் விஜய் நடித்தது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட தெறி படம் போல் லியோ படத்திலும் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

History of Violence என்ற ஆங்கில படத்தின் தழுவல் தான் லியோ படம் என்ற தகவலும் காட்டுத்தீ போல ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

muthu

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment