களைகட்ட போகும் ‘லியோ’ படத்தின் புரோமோஷன்!.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான்..
இயக்குனர்களில் சூப்பர் ஸ்டார் இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். பல நடிகர்களின் கனவு இயக்குனராகவும் இருந்து வருகிறார். லோகேஷிடம் ஒரு படம் நடிக்க மாட்டோமா என்று ஏங்கும் அளவிற்கு தான் கொடுத்த 4 படங்களும் அவரின் பெருமையை பறை சாற்றி கொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில் விஜயுடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துக் கொள்ளும் லோகேஷ் லியோ படத்தின் படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி வருகிறார். இந்த மாத இறுதியில் படப்பிடிப்புகள் முடிந்து படக்குழு சென்னை வருவதாக தகவல் வெளிவந்தன.
அதனை அடித்து ராமோஜி பிலிம் சிட்டியில் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை பிரம்மாண்ட செட் அமைத்து நடத்தப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றது. படம் அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்கு வரும் என ஆரம்பத்திலேயே லோகேஷ் லாக் செய்து விட்டார். இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் மற்றுமொரு எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.
அதாவது தற்போதைய சூழலில் லியோ படத்தை லலித் தான் தயாரித்து வந்தார். ஆனால் இப்போது விஜயின் மேனேஜரான ஜெகதீஷும் படத்தை தயாரிப்பதாக தெரிகிறது. இது மறைமுகமாக விஜய் உடன் இருந்து உதவுவார் என்றும் சொல்லப்படுகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்னவெனில் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் என்று சொன்ன நிலையில் ஏற்கெனவே உலககோப்பை கிரிக்கெட் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கப்பட இருக்கிறது.
இந்தியாவின் பல நகரங்களிலும் போட்டிகள் நடத்தப் போவதாக கூறப்படுகிறது. அதனால் சென்னையில் கண்டிப்பாக போட்டி இருக்கும் என தெரிகிறது. அதனால் மைதானத்தில் லியோ படத்தின் புரோமோஷனுக்காக போஸ்டர்கள் வெளியிடப்படலாம் என சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே ‘மெர்சல்’ பட ரிலீஸ் சமயத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிகள் சென்னையில் நடந்த போது மெர்சல் படத்தின் போஸ்டர்கள் பெரிய திரையில் காண்பிக்கப்பட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்கள். அதனால் ஜெகதீஷ் அந்த மாதிரியான யோசனையில் இருப்பதாக கூறுகிறார்கள். எப்படி இருந்தாலும் அக்டோபர் மாதம் முழுவதும் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான்.
இதையும் படிங்க : சொன்னதை செய்த சூப்பர் ஸ்டார்.. பிதாமகன் தயாரிப்பாளருக்கு செய்த மாபெரும் உதவி…