இதுவரை இல்லாத சவால்!.. லியோ படத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் அந்த ஒரு பாடல்!.. என்ன மேட்டருனு தெரியுமா?..

by Rohini |   ( Updated:2023-04-27 06:12:30  )
vijay
X

vijay

மிகுந்த எதிர்பார்ப்புடன் தயாராகி கொண்டு வருகிறது ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படம் விறுவிறுப்பாக தயாராகிக் கொண்டு வருகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கூடவே மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு வருகின்றனர்.

இன்னும் 50 நாள்களே படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் படத்தை பற்றிய எதாவது ஒரு அப்டேட் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கின்றன. அதாவது படத்தில் ஒரே ஒரு பாடலே உள்ளதாக தகவல் வெளியாகின. பொதுவாக லோகேஷின் படம் என்றாலே பாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார் என்பது அனைவரின் கருத்து.

ஆனால் விஜய் நடிக்கும் படம் என்பதால் மக்கள் அதிகம் ரசிக்கக் கூடியது விஜயின் நடனத்தைதான். அப்படி இருக்கும் போது ஒரு பாடல் என்பது சாத்தியம் இல்லை என்றுதான் கூறிவருகின்றனர். இந்த நிலையில் லியோ படத்தில் ஒரு பாடலை மிகவும் பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.

எப்படி இந்தியன் படத்தில் ‘கப்பலேறி போயாச்சு’ என்ற பாடலை பிரம்மாண்டமாக எடுத்தார்களோ அதே போல் இந்தப் படத்திலும் ஒரு பாடலை கோலாகலமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். அதற்காக இந்தப் பாடலில் கிட்டத்தட்ட 2000 டான்சர்களை
கொண்டு பாடலை அமைக்க போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.

அத்தனை டான்சர்களுக்கு எங்கே போவது என்பது தான் அனைவருக்கும் சந்தேகம். இந்தியா முழுவதிலும் உள்ள குறிப்பிட்ட மாநிலங்களில் உள்ள டான்சர்களை வரவழைத்து இந்தப் பாடலை பதிவு செய்யப்போவதாக கூறுகிறார்கள். மே 20ல் இருந்து ஜூன் 1 ஆம் தேதி இந்தப் பாடலுக்கான ரிகர்ஷல் நடக்க போகிறதாம். ஜூன்2 ல் இருந்து ஜூன் 11 வரை சூட்டிங் நடக்க போகிறதாம். பேன் இந்தியா படம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.ஆனால் இது பேன் இந்தியா சாங்காக மாறப்போகிறது. இந்தப் பாடலுக்கு நடனம் அமைக்கப் போறது டான்ஸ் மாஸ்டர் தினேஷ் தானாம்.

இதையும் படிங்க : கண்டவனெல்லாம் பாட்டு எழுதுறதா?!. வாலியை அவமானப்படுத்திய பிரபல இசையைமைப்பாளர்…

Next Story