Connect with us

Cinema News

லியோவின் ட்ரைலரிலுமா கைய வைப்பீங்க.. கடுப்பில் கதறும் விஜய் ரசிகர்கள்.. அட போங்கப்பா!

Leo Update: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் பேச்சு தான் சமூக வலைத்தளத்தினை ஆக்கிரமித்து இருக்கிறது. அந்த வகையில் பலரின் எதிர்பார்ப்புக்கு காரணமாகி இருக்கும் திரைப்படமாக வலம் வருகிறது. 

முன்வியாபாரமே 450 கோடியை தாண்டி இருக்கும் நிலையில் இப்படத்தில் த்ரிஷா, த்ரிஷா, அர்ஜூன், சாண்டி, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின் ஆகியோர் நடித்திருப்பதும் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுத்தது குத்தமாடா?!.. ரஜினி படத்துக்கு வந்த பெரிய சிக்கல்!..

அதிலு சமீபத்தில் வெளியான ஜெய்லர் படத்தின் வெற்றியை க்ராஸ் செய்யவே படக்குழு பெரும்பாடுபட்டு வருகிறது. ஜெய்லர் ஆடியோ ரிலீஸில் ரஜினி காக்கா மற்றும் கழுகு கதையை சொல்லிவிட்டு நான் பொதுவா சொன்னேன். உங்க இஷ்டத்துக்கு மாத்திடாதீங்க என ஒரு இக்கு வைத்து சென்றார்.

அதே டெக்னிக்கை கையில் எடுத்திருக்கும் லியோ டீமும் கடைசி நேரத்தில் போலீஸ் பாதுகாப்புக்கு லெட்டர் எழுதியும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் நிகழ்ச்சியையே படக்குழு ரத்து செய்தது. இதனால் தங்களை ஒடுக்கிறார்கள் என ஒரு மாயை உருவாக்கி இருக்கின்றனர்.

இந்த ப்ரோமோஷனே படத்தின் வசூலுக்கு உதவி செய்யும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மேலும் இப்போது ட்ரைலரை பற்றி எதுவும் முடிவெடுக்க வேண்டாம். சென்சார் வேலையை முடிக்கும் பணியில் படக்குழு இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பாட்ஷா பாரு பாட்டுக்கு 10% ஈடாகுமா லியோ செகண்ட் சிங்கிள்!.. பதிலடி கொடுக்க ரெடியான ரஜினி ரசிகர்கள்!..

அதை முடித்த பின்னரே ட்ரைலரை பற்றி யோசிப்பார்களாம். ஆனால் சென்சார் இழுத்தடிக்கப்பட்டால் ட்ரைலரையும் வெளியிடாமல் ஒரு சஸ்பென்ஸோடயே ரசிகர்களை தியேட்டரில் வைத்து படம் பார்க்க வைப்போம். அதுவும் வசூலுக்கு உதவும் என பல கணக்குகள் படக்குழுவின் கையில் இருக்கிறதாம். போச்சா!

google news
Continue Reading

More in Cinema News

To Top